எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நியூயார்க், மார்ச் 4- அமெரிக்கா வின் கிழக்கு கடலோர மாகா ணங்களை பனிப்புயல் கடுமை யாக தாக்கியது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

அமெரிக்காவின் பல மாகா ணங்களில் கடந்த சில நாட் களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இரவு மற் றும் அதிகாலை நேரங்களில் பனி பெய்து கொண்டே இருக் கிறது. இந்த நிலையில் கிழக்கு கடலோர மாகாணங்களான நியூஜெர்சி, நியூயார்க், மசாசூ செட்ஸ், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, நியூஹேம் ஷையர், மேரிலாண்ட், ரோடே தீவுகள் ஆகியவற்றின் பல் வேறு நகரங்களை பனிப்புயல் நேற்று பலமாக தாக்கியது.

அப்போது மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 100 கி.மீ வேகத்தில் காற்றும் வீசியது. பனிமழையும் கொட்டியது. இதனால் சுமார் 1 அடி உயரத் துக்கும் மேலாக சாலைகளிலும், வீட்டின் மேற்கூரைகளிலும் பனி தேங்கியது.

அதேநேரம் கடற்கரையோர நகரங்களில் சூறாவளி காற்று காரணமாக மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததுடன் வெள்ளமும் கரைபுரண்டு ஓடி யது. மசாசூசெட்ஸ் மாகாணத் தின் வாட்டர் டவுன் நகரில் நூற்றுக்கணக்கான மின்கம்பங் கள் அடியோடு சாய்ந்து விழுந் தன.

இந்த பனிப்புயல், மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை அமெரிக்காவில் 5 பேர் பலி யாகி விட்டனர்.

தெற்கு கரோலினாவில் உள்ள ஜேம்ஸ் சிட்டி நகரில் மரம் முறிந்து விழுந்ததில் காரில் சென்ற 44 வயது மதிக் கத்தக்க ஆண் ஒருவர் பலியா னார்.

இதேபோல் தெற்கு ரிச் மாண்ட் நகரில் மரம் முறிந்து விழுந்து 6 வயது சிறுவன் ஒரு வன் பரிதாபமாக உயிரிழந் தான். கிங்ஸ்வில்லே, புதாம் நகரங்களில் ஒரு மூதாட்டி உள்பட மேலும் 3 பேர் மரம் முறிந்து விழுந்து இறந்தனர்.
இதற்கிடையே, நியூயார்க் நகரில் உள்ள விமான நிலை யங்களில் நேற்று முற்றிலும் விமான சேவை ரத்து செய்யப் பட்டது. இதனால் 3 ஆயிரத் துக்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங் களின் சேவை முடங்கியது. மேலும் 2,400 விமானங்களின் வருகை தாமதம் ஆனது.

இதேபோல் பனிப்புயல், வெள்ளம் தாக்கிய மாகாணங் களில் பயணிகளின் பாதுகாப்பு காரணம் கருதி ஆம்டிராக் ரயில் சேவையும் நிறுத்தப்பட் டது. வடக்கு கடலோர பகுதி களில் உள்ள 14 மாகாணங் களிலும் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின் சாரம் துண்டிக்கப்பட்டது.

கிழக்கு பாஸ்டன் நகரில் கடல் அலைகள் 14 அடி உய ரத்துக்கு சீறி எழுந்தன. இத னால் ஏராளமான வீடுகளுக்குள் 4 அடி உயரத்துக்கு வெள்ளம் புகுந்தது. இதையடுத்து கட லோர நகரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாது காப்பான இடங்களுக்கு அப் புறப்படுத்தப்பட்டு வருகின்ற னர். இதனால் தொடர்ந்து 2ஆ-வது நாளாக இப்பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன.

தலைநகர் வாஷிங்டன் மற் றும் அதன் சுற்றுப்புற பகுதி களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner