எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சியோல், மார்ச் 5- வடகொரியா உடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, அந்நாட் டுக்கு தென்கொரியாவின் சிறப்பு தூதர் குழு திங்கள்கிழமை (மார்ச் 5) செல்கிறது. இதுகுறித்து தென் கொரிய அதிபர் அலுவ லகத்தின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்த தாவது:

அண்மையில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டி யில் வடகொரியா மற்றும் தென் கொரிய நாடுகள் இணைந்து பங்கேற்றதற்கு பிறகு ஏற்பட் டுள்ள சாதகமான சூழலில் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், தூதர் குழுவை அனுப் பும் இந்த முடிவை மேற்கொண் டுள்ளார். அவரது ஒப்புதலின் பேரில், சமாதான பேச்சுவார்த் தைகளுக்கு மேலும் வலு சேர்த்திடும் வகையில் சிறப்புத் தூதர் குழு திங்கள்கிழமை வட கொரியா செல்கிறது. இந்த சிறப்புத் தூதர் குழுவில், தென் கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷங் இ-யங், உளவுத் துறை தலைவர் ஷுக் ஹுன் உள்ளிட்ட 5 முக்கிய உயரதிகாரி கள், 5 துணை அதிகாரிகள் என மொத்தம் 10 பேர் இடம் பெற் றுள்ளனர். அணு ஆயுதங்கள் தொடர்பாக வாசிங்டன் மற் றும் பியோங்யாங் இடையில் நின்றுபோன பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுப்பது குறித்து வடகொரிய அதிகாரிக ளிடம் இந்தக் குழு விரிவாக ஆலோசனை நடத்தவுள்ளது.
மேலும், இரு கொரிய நாடு களுக்கிடையில் வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பாக வும் பேச்சுவார்த்தை நடத்தப் படும். திங்கள்கிழமை (மார்ச் 5) வட கொரியா செல்லும் இந்த சிறப்பு தூதர் குழு செவ் வாய்கிழமை (மார்ச் 6) மீண் டும் தென்கொரியா வந்தடை யும். அதன் பின்பு, அந்தக் குழு அமெரிக்காவுக்கு சென்று பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட முன்னேற் றங்கள் குறித்து வாசிங்டன் அதி காரிகளை சந்தித்து எடுத்துரைக் கும் என்றார் அவர். தென் கொரி யாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த வட கொரியத் தலை வர்கள், அதிபர் மூன் ஜேன்-இன்னை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் விரும்புவதாகத் தெரிவித்திருந் தனர்.

மேலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா தயாராக இருப்பதாக வும் அவர்கள் தெரிவித்தனர். தென் கொரியாவின் பியோங் சாங் நகரில் நடைபெற்ற குளிர் கால ஒலிம்பிக் தொடக்க விழா வில் பங்ககேற்பதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் இளைய சகோதரி ஜிம் யோ-ஜோங் தென் கொரியா வந்தார். இந்த இணக்கமான சூழ்நிலையில் தென் கொரியா தனது தூதர் குழுவை வட கொரி யாவுக்கு அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner