எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் கால்பந்து லீக் லா லிகா. இதில் பார்சி லோனா, ரியல் மாட்ரிட், அட் லெடிகோ மாட்ரிட் வாலன் சியோ போன்ற முன்னணி அணிகள் பங்கேற்று விளை யாடி வருகின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளை யாடும் இந்த தொடரில் ஒவ் வொரு அணியும் மற்ற அணி களுடன் இரண்டு முறை மோத வேண்டும்.

அதன்படி ஒவ்வொரு அணி யும் 38 போட்டிகளில் விளை யாட வேண்டும். 38 போட்டிக ளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.

கடந்த 2016--17 சீசனில் வாகையர் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் தொடக்கத்தில் சில தோல்விகளை சந்தித்த காரணத்தால் இந்த சீசனில் வாகையர் பட்டத்தை வெல் லும் வாய்ப்பை இழந்தது. கடந்த சீசனில் 2ஆ-வது இடம் பிடித்த பார்சிலோனா தற்போது இந்த சீசனில் சிறப்பாக விளை யாடி வருகிறது.

பார்சிலோனா இந்த சீசனில் இதுவரை 31 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வந்த நிலையில் நேற்று வாலன் சியா அணியை எதிர்கொண்டது. இதில் சுவாரஸ், உமிடிடி ஆகி யோர் கோல் அடிக்க பார்சி லோனா 2--1 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லா லிகா வரலாற்றில் 39 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத அணி என்ற வர லாற்றை படைத்துள்ளது. இந்த சீசனில் 32 போட்டிகளிலும், கடந்த சீசனில் கடைசி 7 போட்டிகளிலும் பார்சிலோனா தோல்வியை சந்தித்தது கிடை யாது.

பார்சிலோனா 32 போட்டி கள் முடிவில் 82 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அட்லெடிகோ டி மாட்ரிட் 31 போட்டியிலும் 68 புள்ளிகளு டனும், வாலன்சியா 32 போட் டிகளிலும் 65 புள்ளிகளுடனும், ரியல் மாட்ரிட் 31 போட்டிகளில் 64 புள்ளிகளுடன் முறையே 2-ஆவது இடம் முடில் 4ஆ-வது இடம் வரை பிடித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner