எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இஸ்லாமாபாத், ஜூன் 26  பாக்., தேர்தலில் போட்டியிடும் சுயேச் சை வேட்பாளர், தனக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக, வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள முசாபர்கார் என்ற இடத்தை சேர்ந் தவர், முகமது ஹுசைன் ஷேக். இவர், பாக்., பொதுத் தேர்தலில், சுயேச்சை வேட்பாளராக போட்டி யிடுகிறார்.

இதற்கான வேட்பு மனுவை, சமீபத்தில் தாக்கல் செய்தார்.அதில், தனக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்; இது, பல மூத்த அரசியல் தலைவர் களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. முகமது ஹுசைன் ஷேக்கின் குடும்பத்துக்கு சொந்த மாக, பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.

இவற்றில், பல்வேறு இடங்கள் மீது, 88 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது.

இந்த வழக்குகளில், சமீபத் தில், முகம துவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.

இதையடுத்து, அவரது சொத்து மதிப்பு, பல மடங்கு உயர்ந்தது.

முகமது போட்டியிடும் முசாபர்கார் தொகுதியில், 40 சதவீத நிலங்கள் இவருக்கு சொந்தமானவை; இவை தவிர, அருகில் உள்ள பல ஊர்களில், இவருக்கு சொத்துக்கள் உள்ளன.

பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி மரியம், பாக்., மக்கள் கட்சியின் தலைவர்கள் பிலாவல் புட்டோ சர்தாரி மற்றும் ஆசிப் அலி சர்தாரி ஆகியோர், சில ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு காட்டி உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner