எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜோஸ், ஜூன் 26 நைஜீரியாவில் பயங்கர வன்முறை ஏற்பட்டுள்ளது. 86 பேர் கொல் லப்பட்டதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி பகுதியில் இரு இனக் குழுக் களுக்கு இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. இதை யடுத்து, இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

அப்போது ஏற்பட்ட கலவ ரத்தில் சிக்கி 86 பேர் உயிரிழந் துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

50-க்கு மேற்பட்ட வீடுகள் சூறையாடப் பட்டன.

கலவரம் ஏற்பட்ட பகுதி களில் ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் நிலப் பிரச் சினை தொடர்பாக பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையில் மோதல்கள் நடப்பது வழக்கம். கடந்த 2009-ஆம் ஆண்டில் இது போன்று நடைபெற்ற மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி னர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner