எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

சால்ட் லேக், ஜூன் 26- அமெரிக் காவின் சால்ட் லேக் சிட்டியில் வில்வித்தை உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான தனிப் பிரிவில் இந்தியாவின் முன் னணி வீராங்கனையான தீபிகா குமாரி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் தீபிகா குமாரி ஜெர்மனியைச் சேர்ந்த மிட்செல் க்ரோப்பனை எதிர்கொண்டார். முதல் செட்டில் 30-க்கு 29 புள்ளிகள் பெற்று தீபிகா குமார் 2--0 என முன்னிலைப் பெற்றார். 2-ஆவது செட் டிராவில் முடிந் ததால் இருவரும் தலா ஒரு புள்ளிகள் பெற்றனர். 3ஆ-வது சுற்றை ஜெர்மனி வீராங்கனை மிட்செல் கைப்பற்றினார். இதனால் ஸ்கோர் 3--3 என சமநிலையில் இருந்தது.

ஆனால், 4-ஆவது மற்றும் 5-ஆவது செட்டில் அபாரமாக அம்பு எய்திய தீபிகா குமாரி முறையே 29 புள்ளிகள், 27 புள்ளிகள் பெற்றார். ஜெர்மனி வீராங்கனையால் இரண்டு செட்டிலும் தலா 26 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. இதனால் 7--3 என தீபிகா குமாரி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வெற்றார்.

2011, 2012, 2013 மற்றும் 2015 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய தீபிகா குமாரியால் தங்கம் வெல்ல முடியவில்லை. தற்போது முதன்முறையாக தங்கம் வென்றுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner