எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லண்டன், ஜூன் 27- 550 இடங் களை கொண்ட துருக்கி நாட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடை பெற்றது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகளை எண் ணும் பணி நடைபெற்றது.

அதில், 52.5 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று தாயிப் எர்டோகன் வெற்றி பெற்றுள் ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் துருக்கியின் அதி பராக தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்க உள்ளார் எர்டோகன். இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற தாயிப் எர்டோகனுக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள எர் டோகனுக்கு வாழ்த்துக்கள். பிரிட்டன் மற்றும் துருக்கி இடையிலான இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவதற்கு இணைந்து செயல்படுவோம். மேலும், பிராந்திய பகுதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற் றும் சிரியாவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடு களுக்கு  தேவையான ஒத்து ழைப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner