எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

வாசிங்டன், ஜூன் 27- அமெரிக்கா வில் அமெரிக்கர்களுக்கு மட் டுமே முன்னுரிமை வழங்கப் படும் என கூறி வரும் அதிபர் டொனால்டு டிரம்ப், வெளி நாடுகளில் இருந்து அமெரிக்கா விற்கு வருவோரின் விசா நடை முறைகளை கடுமையாக்கி உள்ளார். அதேபோல், சட்ட விரோதமாக அந்நாட்டிற்குள் அகதிகளாக நுழைபவர்களை தடுத்து நிறுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறார். இதனால் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

புதிய குடியேற்ற விதிக ளைத் தீவிரமாக அமல்படுத்து வதில் உறுதியாக உள்ள அதிபர் டிரம்ப், எல்லைகளின் வழியே அமெரிக்காவுக்குள் சட்டவிரோ தமாக நுழையும் அகதிகளிடம் இருந்து அவர்களின் குழந்தை களை தனியாக பிரித்து காப்ப கத்தில் தங்கவைக்கும் திட் டத்தை செயல்படுத்தி இருந் தார். ஆனால், பல்வேறு தரப்பி னரின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அகதிகளிடமிருந்து குழந்தைகளை பிரிக்கும் திட்டத்தை சமீபத்தில் ரத்து செய்து அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், அகதிகள் குடியேற்றம் பற்றி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோத மாக குடியேறும் பட்சத்தில், நீதிபதிகள் அல்லது நீதிமன்ற வழக்குகளின் தலையீடு ஏதும் இன்றி, அவர்களின் சொந்த நாட்டிற்கே அவர்களை உடன டியாக  திருப்பி அனுப்ப வேண் டும். அவர்கள் நம் நாட்டை ஆக்கிரமிப்பு செய்வதை நாம் அனுமதிக்க முடியாது.

மேலும், அமெரிக்காவில் இருந்துகொண்டே அமெரிக் காவை துண்டாட முயற்சி செய் பவர்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. வலிமையான எல் லைகளே குற்றம் இல்லாத தேசத்தை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சட்டவிரோத மாக குடியேறுபவர்களுக்கும், புகலிடம் கோரி அமெரிக்கா வில் தஞ்சம் அடைபவர்களுக் கும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் டிரம்ப் தெரிவித் துள்ள இந்த கருத்து குறித்து வெள்ளை மாளிகை, இன்ன மும் எவ்வித விளக்கமும் அளிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner