எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ரியாத், ஜூன் 27- இசுலாமிய நாடான சவுதி அரேபியாவில் சரியத் சட்டம் கடைப் பிடிக்கப்படுகிறது. எனவே அங்கு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அங்கு பெண் கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990ஆ-ம் ஆண்டுகளில் இருந்தே பெண்கள் உரிமை சங்கங்கள் போராட்டத்தில் ஈடு பட்டு வந்தனர். மீறி கார் ஓட்டிய  பெண் கள் கைது செய்யப்பட்டனர். அபராத மும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே, நீண்ட கால கோரிக் கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை  சவுதி அரேபிய அரசு நீக்கியுள்ளது. அதைத் தொடர்ந்து 2018ஆ-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நேற்று முதல் பெண்கள் கார் ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்கள் மன மகிழ்ச்சி அடைந்துள்ள னர். அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விசயமாக கருதப்படுகிறது.

இந்நிலையில்,  கார் ஓட்டியை பெண் களை வரவேற்கும் விதமாக பெண்க ளுக்கு காவல்துறையினர் ரோஜா பூ கொடுத்தனர். ரோஜாக்களுடன் ‘சகோத ரிகளே, பாதுகாப்பாக ஓட்டவும்‘ என்ற வாசகங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், சமூக ஆர்வலர்களும் மலர்கள் வழங்கினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner