எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டோக்கியோ, ஜூன் 28- ஜப்பான் மன்னர் அகி ஹிட்டோவின் மூத்த பேத்தி இளவரசி மாகோ (25). இவர் டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த கீ கொமுரோ என்ற வாலிபரை காதலித்தார்.

சாதாரண குடும்பத்தை சேர்ந்த கீ கொமுரோ சட்ட அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய விரும்பினர். அதற்கு இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடந்தது. இவர்கள் இருவருக்கும் வருகிற அக்டோபர் 29-ஆம் தேதி திருமணம் நடக்கிறது.

இதுகுறித்து இளவரசி மாகோ கூறும்போது, இளவரசியாக இருக்கும் நான் சாதாரண நபரை திருமணம் செய்து கொண்டால் எனது இளவரசி தகுதி பறிபோய் விடும் என எனக்கு சிறுவயதிலேயே தெரியும்.

ஆனால் எங்களின் இருவரது மனமும் ஒத்துப்போய் விட்டதால் அந்த தகுதி எனக்கு பெரிதாக தெரியவில்லை. தற்போது வரை அரச குடும்பத்தில் எனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளேன் என்றார்.

உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியல்: சென்னைக்கு 144ஆவது இடம்

நியூயார்க், ஜூன் 28- வாழ்க்கை நடத்துவதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களை அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த மெர்சர் என்ற நிறுவனம் வரிசைப்படுத்தி உள்ளது. 5 கண்டங்களை சேர்ந்த 209 நகரங்களை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட விஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இதில், உலகிலேயே செலவு மிகுந்த நகராக ஹாங்காங், முதலிடத்தை பிடித்துள்ளது. டோக்கியோ, ஜூரிச், சிங்கப்பூர், சியோல், ஷாங்காய், பீஜிங், பெர்ன் ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன.

இந்தியாவிலேயே அதிக செலவு மிகுந்த நகராக மும்பை தேர்வாகி உள்ளது. உலக அளவில் அந்நகரம் 55ஆ-வது இடத் தில் உள்ளது. சென்னை 144-ஆவது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி 103ஆ-வது இடத்திலும், பெங்களூரு 170ஆ-வது இடத் திலும், கொல்கத்தா 182-ஆவது இடத்திலும் உள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner