எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இஸ்லாமாபாத், ஜூன் 28- பாகிஸ் தான் நாட்டின் பஞ்சாப் மாநி லத்தில் அரசு உதவி இயக்குந ராக பணியாற்றிவரும் யூசப் சலீம் பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர்.

ஆனாலும், அந்நாட்டின் சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். தேர் வெழுதிய 300 பேரில் யூசப் சலீம் 21ஆவது இடத்தை பிடித் தார்.

ஆனால், அவரது பார் வைக்குறைப்பாட்டை காரணம் காட்டி அவருக்கு மாவட்ட சிவில் நீதிபதி பதவி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ் தான் உச்ச நீதிமன்றத்தில் யூசப் சலீம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த பாகிஸ் தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார், அனைத்து தகுதிகளையும் உடைய ஒருவர் பார்வை குறை பாடு உடைய காரணத்தினா லேயே அவருக்கு நீதிபதி பதவி மறுக்கக்கூடாது என லாகூர் உயர் நீதிமன்ற தலைமை நீதி பதிக்கு கடந்த மாதம் அறிவு றுத்தினார்.

இந்நிலையில், 21 பேருடன் சேர்ந்து யூசப் சலீமும் நீதிபதி யாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் பாகிஸ்தானின் முதல் பார் வையற்ற நீதிபதி எனும் பெரு மையை யூசப் சலீம் பெற்று உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner