எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நைஜீரியா, ஜூன் 29 நைஜீரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாக பிளேடியூ மாகாணத்தின் ஆளுநர் சிமோன் லலாங் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிளேடியூ மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு பிரிவினருக்கு இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. விவசாயத்தைத் தொழிலாக கொண்ட ஒரு பிரிவினருக்கும், ஆடு மேய்க்கும் தொழில் புரியும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே நிலப் பிரச்சினை காரணமாக இந்த கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு பிரிவைச் சேர்ந்த 5 பேரை மற்றொரு பிரிவினர் கொலை செய்ததைத் தொடர்ந்து கலவரம் பெரிய அளவில் வெடித்தது. பயங்கர ஆயுதங்களைக் கொண்டு ஒருவர் மீது மற்றொருவர் தாக்கிக் கொண்டனர்.

இக்கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாக அந்த மாகாணத்தின் ஆளுநர் சிமோன் லலாங் தெரிவித்துள்ளார். நைஜீரிய அதிபர் முகம்மது புஹாரியுடன், ஜாஸ் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட ஆலோசனைக்கு பிறகு இத்தகவலை ஆளுநர் தெரிவித்தார். மேலும், இந்த மோதலுக்கு மத ரீதியான சாயத்தை யாரும் பூச வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, கலவரம் நேர்ந்த பகுதியில் தொடர்ந்து பதற்ற மான சூழல் நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து, கூடுதல் காவல் துறையினரும், ராணுவத்தினரும் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் போகோ ஹாரம் பயங்கரவாதிகளால் நடத்தப்படும் தாக்குதல்கள் மட்டுமன்றி, விவசாயிகளுக்கும் ஆடு மேய்ப்போருக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் மோதல் களும் பெரும் பிரச்னையாக உள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டில் இருந்து போகோ ஹாரம் பயங்கர வாதிகளின் தாக்குதல்களுக்கு இதுவரை 20,000 பேர் பலியாகி யுள்ளனர். இதேபோல், மேற்கண்ட இரு பிரிவினருக்கு இடையே நிகழும் கலவரங்களிலும் உயிரிழப்புகள் நேரிட்டு வருகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner