எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சியோல், ஜூன் 29 வடகொரியா அணுஆயுத சோதனை தளத்தை மீண்டும் கட்டமைக்கிறது என தகவல் வெளியாகி யுள்ளது.

அமெரிக்கா, தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வார்த்தை யுத்தங்களையும் அணு ஆயுத சோதனை கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனை ஆகியவற்றை வட கொரியா நடத்தியது. வடகொரியாவிற்கு எதிராக அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. அதுமட்டுமின்றி, ஐ.நா. சபையும் பொருளாதார தடைகளை விதிக்க வைத்தது. ஒரு கட்டத்தில் இரு நாடுகள் இடையே போர் மூளும் நிலை கூட உருவானது. ஆனால் தென்கொரி யாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், வடகொரியாவின் நிலைப் பாட்டில் பல மாற்றங்களை உருவாக்கின. தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை வடகொரியா கடைப்பிடிக்க தொடங்கியது.

அதுமட்டுமின்றி, வடகொரியாவுக்காக அமெரிக்காவிடம் தென்கொரியா பரிந்து பேசியது. இதனையடுத்து டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது அணு ஆயுத சோதனை இனிமேல் நடத்த மாட்டோம் என கிம் ஜாங் உறுதியளித்ததாக தெரிவிக்கப் பட்டது. இதற்கிடையே வட கொரியாவின் போக்கு உலகப் போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் கவலை கொண்ட நிலை யில், அணு ஆயுத சோதனையை நிறுத்து வதாக வட கொரியா அறிவித்துள்ளது சர்வதேச அளவில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. இதற் கிடையே அணு ஆயுத தளங்கள் இடிக்கப்படும் புகைப் படங்களும் வெளியாகியது.

இந்நிலையில் வடகொரியா அணு ஆயுத சோதனை தளத்தை மீண்டும் கட்ட மைக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் உடன்படிக்கைக்கு எதிராக வடகொரியா, அணு ஆராய்ச்சி மய்யத்தில் விரைவான முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பதை செயற்கைக் கோள் புகைப்படங்கள் காட்டுகிறது என 38   செய்தி வெளியிட்டுள்ளது.

"ஜூன் 21-ஆம் தேதி முதலான வர்த்தக செயற்கைக் கோள் படங்கள் வடகொரியா வின் ஆராய்ச்சி மய்யத்தில் கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்படுகிறது, என்ப தையே காட்டுகிறது என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner