எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மேரிலேண்ட், ஜூன் 30- அமெரிக் காவின் மேரி லேண்ட் மாகா ணத்தில் உள்ள அன்னாபோலீஸ் நகரில் கேபிட்டல் கெசட் பத்தி ரிகை அலுவலகம் உள்ளது. நேற்று ஒரு இளைஞர்  செய்தி அறை பகுதிக்குள் நுழைந்து தான் வைத்திருந்த துப்பாக்கி யால் கண்ணாடி கதவு வழியாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

இதனால் அங்கு பதட்ட மும் பரபரப்பும் ஏற்பட்டது. என்ன நடக்கிறது என தெரியா மல் திகைத்த ஊழியர்கள் உயிர் பிழைக்க அங்குமிங்கும் ஓடி பதுங்கினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து துப்பாக்கியால் சுட்ட நபரை தேடினர். பின்னர் 60 வினாடி களில் பத்திரிகை அலுவலகத் தில் பதுங்கியிருந்த இளை ஞரை பிடித்து கைது செய்தனர்.

அவரது பெயர் ஜரோட் ரமோஸ். இவருக்கு 35 வயது இருக்கும். சமூக வலை தளங் களில் கேபிட்டல் கெசட் பத் திரிகைக்கு மிரட்டல் விடுத்து வந்தார். இந்த நிலையில் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்து திடீர் துப்பாக்கிக் சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கியால் சுட்டதற் கான காரணத்தை காவல்துறையினர் வெளியிடவில்லை. கடந்த 2012ஆ-ம் ஆண்டு இந்த பத்திரிகை மீது இவர் நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அது கிடைக்காததால் ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.

பத்திரிகை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்ப வத்துக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்து உள்ளார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்க ளுக்கு ஆழ்ந்த இரங்கல் கூறி யுள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner