எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உத்தராகண்ட், ஜூன் 30 உத்தராகண்ட் மாநில முதல்வர்  திரிவேந்திர சிங் மக்கள் குறை கேட்கும் கூட்டத்தில், ஆசிரியர் ஒருவர் தனது குறையைக் கூற வந்தார். அவரது குறையைப் பொறுமையாக கேட்க விரும் பாமல் அவரை கைது செய்யக் கூறியும், பொது இடத்தில் ஆசிரியர் என்றும் பாராமல் அவரைத் திட்டி உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவும்  முதல்வர் உத்தரவிட்டார்.

உத்தராகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள் ளியில் தலைமையாசிரியராக  பணி புரிபவர் உத்ரா பகுகுணா.  அவர்  உத்தராகாண்ட் பிஜேபி முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பங்கேற்ற "ஜனதா தர்பார்" என்னும் மக்களின் குறைகேட்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

அதில் முதல்வரிடம் பேசிய அவர் தனக்கு 57-வயது ஆகிவிட்டதாகவும், இதய நோயாளியான தன்னால் நீண்ட தூரம் உள்ள பள்ளிக்குச் செல்ல மிகவும் சிரமப்படுவதாகவும், தன்னை தனது ஊருக்கு அருகில் உள்ள ஒரு பள்ளிக்கு மாற்றும்படியும் வேண்டுகோள் விடுத்தார். அவர் தன்னுடைய கோரிக்கையைக் கூறிக்கொண்டு இருக்கும் போது முதல்வர் அவ்வூர் பாஜக பிரமுகரிடம் பேசிக்கொண்டு இருந்தார். இதனைப் பார்த்த அந்த தலைமை ஆசிரியர், தன்னு டையை கோரிக்கைக்கு செவி சாயுங்கள் என்று கேட்டுள்ளார். அதனைக் கேட்டவுடன்  முதல் வர் ராவத் தலைமை ஆசிரிய ருடன் கடுமையாக வாதிடத் தொடங்கினார். "உன்னுடைய கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடு, இல்லையென்றால் இங்கிருந்து ஓடிப்போ" என்று ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டார். மேலும் அந்த தலை மையாசிரியரைப் பார்த்து தொடர்ந்து கடுமையாக சத்தம் போட்டுள்ளார். (இதுதான் குறை கேட்கும் லட்சணமா?)

மேலும் பொறுமையை இழந்த முதல்வர்  மைக் மூலம் "இந்த பெண்ணை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யுங்கள்.   அவரை இப்போதே கைது செய்யுங்கள்" என கத்தினார்.   இதையடுத்து அந்த தலைமை யாசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஒரு பள்ளியின் பெண் முதல்வர் கோரிக்கை எழுப் பியதற்காக அவரைக் கைது செய்ய சொன்ன நிகழ்வு சமூக வலை தளங்களில் பரவி வைரலாகியது.   பல தரப்பட்ட மக்களும், அரசியல் தலை வர்களும் முதல்வர் பொறுமை இல்லாமல் பெண்ணிடம் கடு மையாக நடந்துக் கொண்ட தாகக்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு பேசிய முதல் வர் அரசு அதிகாரிகள் யாரும் தன்னிடம் குறைகளைக் கூற வரக்கூடாது என்றும், தான் அவர்களின் குறைகளை மட்டுமே கேட்கவேண்டும் என்று நினைக்கக் கூடாது என்றும் கூறினார். மேலும் அந்த பள்ளியின் முதல்வர்  தன்னை எதிர்த்துப் பேசியதாக வும், பலர் முன்னிலையில் தன்னை எதிர்த்துப் பேசியதால் தன்னுடைய மரியாதை கெட்டு விட்டதாகவும் இதற்கு தண்ட னையாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் வரும் மக்களின் குறைகளைக் கூட பொறுமை யாக கேட்காமல் இருக்கும் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் இந்த ஆண்டு, யோகா நாளன்று பிரதமர் மோடி மற்றும் 55 ஆயிரம் பேருடன் யோகா செய்து ஆசிய சாதனை படைத்தார் என்பதும், ஆண் டிற்கு 40 நாட்கள் சத்பவனா விரதம் (அதிகம் பேசாமல் மனதை ஒருமுகப்படுத்தும் ஒருவழி முறை) இருப்பவ ராவார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner