எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜூன் 30- அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றது முதலே ரசியாவும் சர்ச்சைகளில் சிக்கி வந்தது.

அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரசிய உளவுத் துறை வேலை செய்ததாக குற் றச்சாட்டு எழுந்தது. இது தொடர் பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.அய் விசா ரித்து வருகிறது.

எனினும், இந்தக் குற்றச் சாட்டுகளை இரு நாடுகளும் மறுத்து வருகின்றன. பல்வேறு விவகாரங்களில் இரு நாடு களுக்கும் பனிப்போர் நீடித்து வரும் நிலையில், மூன்றாம் நாட்டில் சந்திப்பு நடத்த இரு தலைவர்களும் தயாராக இருப் பதாக சமீபத்தில் அறிவிக்கப் பட்டது. அடுத்த மாதம் 16-ஆம் தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் டிரம்ப் - புதின் சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை இன்று அறிவித்து உள்ளது.

இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ள இரு தலைவர்களும், கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார் கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, கடந்தாண்டு ஜெர்மனியில் நடந்த ஜி-5 உச்சி மாநாட்டில் இருவரும் சந்தித்து பேசியிருந்தனர்.

ஆனால், பின் லாந்தில் நடக்க இருக்கும் இந்த சந்திப்பு விரிவானதாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 12-ஆம் தேதி வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சிங்கப்பூரில் சந்தித்து பேசிய டிரம்ப், வரலாற்றில் இடம் பிடித்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner