எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெண்கள் வாகனம் இயக்குவதற்கு சவுதி அரேபியாவில்  பல ஆண்டுகளாக நீடித்து வந்த தடை தற்போது விலக்கப் பட்டுள்ள நிலையில், ஜெட்டாவை சேர்ந்த பேறுகால செவிலியரான ரோவா அல்டா வெலி முதல் முறையாக வேலைக்கு காரை ஓட்டிக்கொண்டு சென்றார். அவர் தனது அனுபவத்தைக் கூறும் போது வழக்கத்திற்கு மாறாக இன்றைக்கு நான் முன்னதாகவே எழுந்துவிட்டேன். நான் இன்றைய நாளுக் காக மிகவும் உற்சாகமாக காத்திருந்ததால் என்னால் தூங்க முடியவில்லை. ஏனெனில், முதல் முறையாக எனது அலுவலகத்துக்கு காரின் பின்புறத்தில் உட்காராமல், நானே ஓட்டிக்கொண்டு செல்லவுள்ளேன். நான் ஜெட்டாவில் கார் இயக்கப்போகிறேன் என்பதை என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை.

சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு பல்லாண்டுகளாக நீடித்து வந்த தடை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தடை நீக்கப்பட்டவுடன் பெண்கள் சாலையில் வாகனம் இயக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை காண்பதற்காக நான் இரவு முழுவதும் சமூக வலைதளங்களை பார்த் துக்கொண்டிருந்தேன்.

சவுதியில் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முதல் நாளன்று சாலைகள் அமைதியாகவே காணப் பட்டன. ஆர்வத்துடன் முதல் முறையாக வாகனம் ஓட்டுவதற்கு காத்திருந்தவர்களுக்கு இது நல்லதாகிப்போனது. சில யோசனைகள் பெறுவதற்காகவும், தார்மீக ஆதரவுக்காகவும் என் தந்தையுடன் சேர்ந்து காரில் கிளம் பினேன்.

காரில் சென்றுக்கொண்டிருக்கும்போது சாலையோரத்தில் போக்குவரத்து காவல ரைப் பார்க்க நேர்ந்தது; ஆனால், என்னிடம் ஓட்டுநர் உரிமம் இருந்ததால், நான் சட்டப் படியே ஓட்டிக்கொண்டிருந்தேன். செல்லும் வழியில் காபி குடிப்பதற்காக பயண வழிக் கடையொன்றில் வாகனத்தை நிறுத்தி னேன். கடைக்காரர் காபி கொடுத்த முதல் பெண் வாகன ஓட்டுநர் நான்தான்.

நான் டிப்ளமோ படிப்பதற்காக பஹ் ரைன் சென்றிருந்தபோது அங்கு வாகனம் ஓட்டிய அனுபவம் உள்ளது. என்னிடம் 2005ஆம் ஆண்டிலிருந்து ஓட்டுநர்  உரிமம் உள்ளது. சுற்றுலாவுக்காக அமெரிக்கா, போர்ச்சுகல் மற்றும் துபாய் போன்ற நாடுக ளுக்கு செல்லும்போது என்னிடம் சர்வதேச ஓட்டுநர் உரிமமும் இருந்தது.

எனது பகரைன் உரிமத்தை இங்கே மாற் றிக்கொள்ள முடிந்தது. ஆனால், ஓட்டுநர் சோதனைக்கு நேரம் பதிவு செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. ஏனெனில், ஜூலைக்கு முந்தைய அனைத்து நாட்க ளுக்கும் ஏற்கெனவே பதிவு முடிந்திருந்தது. நல்ல வேலையாக, சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், எனது சகோதரிக்கும் நேரம் கிடைத்ததால், உடனடியாக சென்று முதல் வாய்ப்பிலேயே ஓட்டுநர் உரிமத்தை பெற்றோம்.

தடை நீக்கப்பட்டவுடனேயே வாகனம் ஓட்டலாம் என்பதால் என்னையும், எனது சகோதரியையும் ஓட்டுநர் உரிமம் பெறும் படி என் தந்தையும், சகோதரரும் கூறினார் கள்.

நான் பேறுகால செவிலியராக பணிபுரி கிறேன். இங்கிலாந்தில் பேறுகால மருத் துவப் பணியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். ஒரு பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துசெல்வதற்கு அவசர ஊர்த்திக்காக காத்திருக்காமல் உடனடி யாக மருத்துவமனைக்கு அழைத்துசெல் வதற்கு ஒரு பேறுகால செவிலியர் வாக னத்தை இயக்க வேண்டுமென்பது அய் ரோப்பிய மற்றும் மற்ற வளர்ந்த நாடுகளில் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பெண்கள் வீட்டிலேயே குழந்தை பெற் றுக்கொள்வதற்கு சவுதி அரேபியாவில் விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று நம்புகிறேன். பேறுகால செவிலியரின் உதவி யுடன் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள் வதற்கு வாகனம் இயக்குவதற்கு அனு மதிக்கப்பட்டுள்ளது ஒரு வாய்ப்பாக அமையுமென்று நினைக்கிறேன். மேலும், இரவு நேரப்பணியை முடித்துவிட்டு மருத் துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லும் மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த தடை நீக்கப்பட்டுள்ளது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

கிழக்கு ஜெட்டாவிலுள்ள நான் பணி புரியும் மருத்துவமனையை கிட்டத்தட்ட அடைந்துவிட்டேன். நான் வரும் வழியில் ஒருவர் கூட என்னை கண்டுகொள்ள வில்லை அல்லது வெறித்துப் பார்க்க வில்லை; நான் வெகுகாலமாக காரை இயக்குவது போன்று உணர்கிறேன்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தினம்; சவுதி அரேபியாவிலுள்ள பெண்களுக்கு இதுபோன்ற பல வரலாற்று சிறப்புமிக்க தினங்கள் காத்திருக்கின்றன என்ற நம்பிக் கையை இது அளிக்கிறது.. சவுதியில் புதிய இளவரசன் 2014-ஆம் ஆண்டு பொறுப் பேற்றதில் இருந்து நாட்டை புதிய பாதைக்கு அழைத்துச்செல்கிறார். முக்கியமாக பெண்களின்  முக்கியத்து வத்தை உணர்ந்து அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த பல்வேறு நடவடிக் கைகளை நீக்கியுள்ளார். கடந்த ஆண்டு திரைப்படம் பார்க்கவும், கால்பந்தாட்ட மைதானங்களுக்குச் சென்று கால்பந் தாட்டப் போட்டிகளைப் பார்க்கவும், தனியாக வர்த்தக நிறுவனங்களுக்குச் சென்று பொருட்கள் வாங்கவும் அனுமதி யளித்தார். அதனைத்தொடர்ந்து ரம்ஜானுக் குப் பிறகு பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதியளிக்கப்பட்டும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை இதற்கான ஆணையைப் பிறப்பித்தார். அந்த ஆணை ஞாயிறு முதல் அமலுக்கு வந்தது. அதனைத்தொடர்ந்து வெளிநாடு களில் கார் ஓட்ட உரிமம் பெற்ற சவுதிப் பெண்கள் சவுதி சாலைகளில் கார் ஓட்டத்துவங்கியுள்ளனர். தற்போது கார் ஓட்டுநர் உரிமம் பெற 63 விழுக்காடு சவுதி பெண்கள் விண்ணப்பதித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner