எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சியோல், ஜூலை 1- வடகொரியா வின் தொடர் ஏவுகணை சோதனை, உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. தடையை மீறி, அணு ஆயுத சோதனை, ஹைட்ரஜன் குண்டு சோதனை என பல்வேறு நாடு களின் கண்டனத்திற்கு ஆளா னது.

இதையடுத்து அய்.நா சபை, அமெரிக்க உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இத னால் கொரிய தீபகற்பம் பதற் றம் நிறைந்த பகுதியாக மாறி யது. எனவே தென்கொரியா விற்கு பலம் சேர்க்கும் வகை யில் அமெரிக்க ராணுவத்தினர் செயல்பட்டனர். இருநாடுக ளும் இணைந்து, பல்வேறு ராணு வப் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் கடந்த 12-ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. வர லாற்று சிறப்புமிக்க சந்திப்பால், இருநாடுகளுக்கு இடையே தற்போது மோதல் போக்கு முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சியோல் நகரின் தெற்கு பகுதியில், அமெ ரிக்க ராணுவம் புதிய தலைமை யகத்தை உருவாக்கியுள்ளது. இதையடுத்து தென்கொரிய தலைநகரான சியோலிலிருந்த ராணுவ முகாமை அமெரிக்கா காலி செய்துள்ளது. இந்த ராணுவ முகாம் கடந்த 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது உருவாக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வெற்றி பெற்ற பின், தென்கொரியா, அமெ ரிக்கா இடையேயான நட்புற வால் அந்த முகாம் தொடர்ந்து நீடித்து வந்தது. இதன்மூலம் தென்கொரியாவின் சியோல் நகரில் கடந்த 70 ஆண்டு கால மாக செயல்பட்டுவந்த அமெ ரிக்க ராணுவத்தினரின் செயல் பாடு முடிவுக்கு வந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner