எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரெடா, ஜலை 1- வாகையர் கோப்பை ஹாக்கிப் போட்டி யின் இறுதிச் சுற்றுக்கு இந்திய ஆடவர் அணி தகுதி பெற்றுள் ளது. பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை 1--1 என டிரா செய்தது.

2019-ஆம் ஆண்டில் உலக ஹாக்கி லீக் போட்டிகள் தொடங்கப்படும் நிலையில் நெதர்லாந்தின் பிரெடா நகரில் வாகையர் கோப்பை ஹாக்கி கடைசி போட்டி நடந்து வருகி றது. உலகின் தலைசிறந்த 6 நாடுகள் பங்கேற்றுள்ள இப் போட்டியில் ஏற்கெனவே உலக வாகையர் ஆஸ்திரேலியா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற் றது. இரண்டாவது அணியை நிர்ணயிக்கும் ஆட்டம் சனிக் கிழமை இரவு நடைபெற்றது.

இதில் நெதர்லாந்து அணியை 1--1 என டிரா செய்து இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்திய தரப் பில் மந்தீப் சிங்கும், நெதர்லாந்து தரப்பில் தியரி பிரிங்க்மேனும் கோலடித்தனர். ஞாயிற்றுக் கிழமை நடக்கும் இறுதி ஆட் டத்தில் ஆஸி.யுடன் மோதுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner