எழுத்துரு அளவு Larger Font Smaller Font

துபாய், ஜூலை 1- இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் கபடி மாஸ் டர்ஸ் தொடர் துபாயில் நடைபெற்றது.

லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா, தென்கொரியாவையும், ஈரான், பாகிஸ் தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன் னேறின.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் பலப்பரீட்சை செய் தன. தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் இந்திய அணி 18--11 என முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.

இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 26 புள்ளிகளும், ஈரான் 15 புள்ளிகளும் எடுத்தன. இறுதியில் இந்தியா 44-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வாகையர் பட்டத்தை கைப் பற்றியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner