எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், ஜூலை 1 ஆள் கடத்தல் சம்பவங்களில் விசாரணை நடத்துவதிலும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவ திலும் இந்தியாவில் தாமதம் காட்டப்படு வதாக அமெரிக்க ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஆள் கடத்தல் சம்பவங்கள், அவற்றின் மீதான நடவடிக்கைகள், தண்டனை வழங் குதல் ஆகியவற்றுக்கு இடையே விகிதம் மிகப்பெரிய அளவில் குறைவாக இருப்ப தாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆள் கடத்தல் தொடர்பான வருடாந்திர அறிக்கையை, அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், ஆள் கடத்தல் சம்பவங்களில் ஒவ்வொரு நாடும் மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொருத்து, அந்த நாடுகளுக்கு 4 நிலைகளில் தர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதில், இந்தியா 2-ஆம் நிலை நாடாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆள் கடத்தல் சம்பவங்களுக்கு எதிராக இந்திய அரசு குறிப்பிடத்தக்க அளவில் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதிக்கப் பட்ட சிறார்களும், பெண்களும் தங்கு வதற்கு காப்பகம் கட்டுவதற்கு பட்ஜெட் டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேபாள எல்லையில் மாணவர்களுக்கும், எல்லையில் வசிப்பவர்களுக்கும் ஆள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக, எல்லைப் பாதுகாப்புப் படையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எனினும், ஆள் கடத்தல் சம்பங்களைத் தடுப்பதற்கு இந்திய அரசு முழுமையான அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்தியாவுக்கு 2-ஆம் நிலை தர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக, ஆண்கள், பெண்கள், சிறார்கள் ஆகியோரைக் கடத்தி கொத்தடி மைகளாகப் பயன்படுத்துவது, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது ஆகிய குற்றச் செயல்களுக்கான களமாக இந்தியா உள் ளது. கொத்தடிமை முறையைப் பொருத்த வரை, வாங்கிய கடனுக்காக ஆண், பெண், குழந்தைகள் என குடும்பமே கொத்தடிமைகளாக வேலை செய்வது தொடர்கிறது. சில இடங்களில் பரம்பரை பரம்பரையாகத் தொடர்கிறது. செங்கல் சூளை, அரிசி ஆலை, தோட்ட வேலை ஆகியவற்றில் இவர்கள் ஈடுபடுத்தப்படு கிறார்கள். கட்டுமானத் தொழில், இரும்பு பட்டறைகள், ஜவுளி ஆலைகள், மீன் பண்ணை ஆகியவற்றிலும் கொத்தடிமை களாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். பெரும் பாலும் சமூகத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் பாதிக் கப்படுகின்றனர்.

இதுதவிர ஆயிரக்கணக்கான முறைப் படுத்தப்படாத வேலைவாய்ப்பு நிறுவ னங்கள், நல்ல வேலை வாங்கித் தருவதாக பொய் செல்லி, இளம்பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் தொழிலில் ஈடு படுத்துகின்றன அல்லது கொத்தடிமைகளாக பணியில் ஈடுபடுத்துகின்றன. கடத்தல் தொழிலில் ஈடுபடுவோர், நல்ல வேலை வாங்கித் தருவதாகவும் அல்லது திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி, பெண்களை யும், சிறுமிகளையும் ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner