எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜூலை 2- அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு தலைமைச் செயலராக, இந் திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா நந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியை அதிகார பூர்வமாக நிர்வகிக்கும் அந்த அமைப்பின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் இந்திய -- அமெரிக்கர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக் கது. இதுகுறித்து சீமா நந்தா கூறுகையில், “எனது வாழ்நாளி லேயே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு இந்த நியமனம்தான். இதற்காக ஜனநாயகக் கட் சிக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்’ என்று பெரு மிதத்துடன் தெரிவித்தார்.

வாக்குப் பதிவு நேரம் நீட்டிப்பு

இசுலாமாபாத், ஜூலை 2- பாகிஸ்தானில் ஜூலை 25-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், வாக்குப் பதிவுக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜூலை 25-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப் பதிவு 8 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு முடிவதே வழக்கமாகும். வாக்குப் பதிவுக்கான காலத்தை கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிப்பதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர் களை தேர்தலில் பங்கெடுக்க வைக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு

பெண்கள் பரிந்துரை

வாசிங்டன், ஜூலை 2- அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆன்டனி கென்னடியின் பதவிக் காலம் முடிவடை வதைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியின் பெயரை ஜூலை 9-ஆம் தேதி பரிந்துரைக்கவிருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதற்கான பட்டியலில் 2 பெண்களும் இடம் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

குகைக்குள் சிக்கிய சிறுவர்கள்

பாஸ்தான், ஜூலை 1- தாய்லாந்தில் மழை வெள்ளம் காரணமாக ஒரு வாரத்துக்கும் மேல் குகைக்குள் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரை தேடி வரும் மீட்புக் குழுவினர், குகைக்குள் பல கி.மீ. தொலைவுக்கு முன்னேறிச் சென்றனர். இதையடுத்து சிறுவர்கள் உயிருடன் மீட்கப்படலாம் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner