எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜூலை 2- சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி அமெரிக் காவில் நுழையும் அகதிகளை யும் அவர்களின் குழந்தைக ளையும் பிரித்து வைக்க வேண் டும் என உத்தரவிட்டார். டிரம் பின் உத்தரவின் அடிப்படை யில், பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்ட னர்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து, தனது கொள்கையில் பின் வாங்கிய அதிபர் ட்ரம்ப், பிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோர்களிடம் ஒப்படைக்க அனுமதித்தார். இந்நிலையில், டிரம்பின் குடியேற்ற கொள் கையை எதிர்த்து நேற்று அமெ ரிக்கா அதிபரின் வெள்ளை மாளிகையை நோக்கி ஆயிரக் கணக்கானோர் பேரணியாக சென்றனர்.

அவர்கள் டிரம்பின் குடி யேற்ற கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியவாறு அவருக்கு எதி ராக முழக்கங்களை எழுப்பிய படி சென்றனர். மேலும் அமெ ரிக்காவின் பல்வேறு பகுதிக ளில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பேரணி நடை பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் இதே கார ணத்திற்காக இந்திய வம்சா வளி எம்.பி. பிரமிளா ஜெய பால் செனட் சபை வளாகத் தில் போராட்டத்தில் ஈடுபட் டார். அவருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர் என் பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner