எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

காபூல், ஜூலை 2- ஆப்கானிஸ்தா னில் தலிபான் பயங்கரவாதிக ளுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்த நாட்டுப் படையினர் சனிக்கிழமை தொடங்கினர்.

தலிபான்களுடனான சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அதிபர் அஷ்ரஃப் கனி வெள்ளிக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கைகள் தொடங்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

இதுகுறித்து அஷ்ரஃப் கனி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தலிபான்களுடன் மேற் கொள்ளப்பட்டு வந்த சண்டை நிறுத்தம் 98 சதவீதம் வெற்றிகர மாக அமைந்தது. இந்த நிலை யில், அந்தச் சண்டை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. இனி தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை களை ஆப்கன் படையினர் மீண் டும் தொடரலாம் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner