எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சியோல் ஜூலை 2 ஸ்டெர்லைட் போராட்டத்தில் இறந்தவர்களுக்கு நீதி வேண்டும் என்றும், 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென்கொரியாவில் வாழும் தமிழர்கள் கண்டன போராட் டத்தை நடத்தியுள்ளனர்.

சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய தமிழக மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆனால் இன்றுவரை உண்மையில் இறந்தவர்கள் எத்தனை பேர்? துப்பாக் கிச் சூட்டிற்கான காரணம் என்ன? இறந்த மக்களுக்கு என்ன நீதி வழங்கப் பட்டது? என எந்தவித அதிகாரப் பூர்வ அறிவிப்பையும் மத்திய -மாநில அரசு கள் தெளிவாக உறுதி செய்யவில்லை என கூறிய தென்கொரிய வாழ் தமி ழர்கள், கொரிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகாரும் அளித் துள்ளனர்.

தென்கொரியாவின் தலைநகர் சியோ லில் உள்ள போசிங்கக் எனும் இடத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் முக்கியமாக தூத் துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர் களுக்குச் சரியான நீதி வழங்க வேண்டும் என்றும், இனி இதுபோல் மக்கள் மீது அடக்குமுறையை ஏவக் கூடாது என்றும் கண்டனக் முழக்கம் எழுப்பப்பட்டது. மேலும் தமிழகத்தில் தற்பொழுது திட்டமிட்டுள்ள சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை இயற்கைக் கும், விவசாயிகளுக்கும் ஆபத்து விளை விக்கும் வகையில் இருந்தால் அந்தத் திட்டத்தை அரசு கைவிடம் வேண்டு மென தமிழக மக்களுக்காக கொட்டும் மழையில்  போராட்டம் நடத்திய தென்கொரிய தமிழர்கள் கோரியுள்ளனர்.

இந்தப்போராட்டத்தில் தென் கொரியாவின் சியோல், சுவோன், பியோங்டேக், சின்ச்சாங், ஜோங்காக் போன்ற பகுதிகளில் வாழும் தமிழ் பெண்கள், குழந்தைகள் உட்பட முப் பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தென்கொரியாவில் தற் பொழுது கன மழை பெய்து வரும் நிலையில் கொட்டும் மழையிலும் குடையுடன் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner