எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, ஜூலை 3- இலங்கை யில் உள்ள ஹம்பந்தோடா துறைமுகத்தை 99 ஆண்டுக்கு அதிபர் ராஜபக்சே அரசு ரூ.70 ஆயிரம் கோடிக்கு சீனா நிறு வனத்துக்கு குத்தகைக்கு விட்டது.

அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதன் மூலம் சீனா இந்திய பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட் டும் என அதிருப்தியை வெளியிட்டது.

இலங்கை எதிர்க்கட்சியின ரும் அரசின் முடிவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அங்கு சீனா ராணுவ நடவடிக் கைகள் மேற்கொள்ள அனு மதிக்க கூடாது என போர்க் கொடி உயர்த்தினர்.

அதைத் தொடர்ந்து ஹம்பந் தோடா துறைமுகத்தில் இலங்கை தனது கடற்படை தளத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அங்கு கடற்படையின் தெற்கு கமாண்டோ பிரிவை நிறுவுகிறது.

அதற்கான அறிவிப்பை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வெளியிட்டார். தலை வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் அடிப் படையில் அங்கு சீனா எந்தவித ராணுவ நடவடிக்கையும் மேற் கொள்ள அனுமதி மறுக்கப்பட் டுள்ளது. என்றார். தற்போது இலங்கை கடற்படையின் தென் கமாண்டோ பிரிவு காலே துறைமுகத்தில் உள்ளது. அது விரைவில் ஹம்பந்தோடாவுக்கு மாறுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner