எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மெக்சிகோ சிட்டி, ஜூலை 3- வட அமெரிக்க நாடான மெக்சிகோ வில் அதிபர் பதவி, நாடாளு மன்றம் மற்றும்  3 ஆயிரம் பிராந்திய பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. தற்போதைய அதிபராக உள்ள பெனா நெய்டோ மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதால், அவர் சார்ந் துள்ள அய்ஆர்பி கட்சி தோல் வியை தழுவும் என கருத்து கணிப்புகள் முன்னரே வெளி யாகின.

அதேபோல, வாக்கு எண் ணிக்கையில் அந்தக் கட்சி பின் தங்கியது. அய்ஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து இடதுசாரி சித்தாந்தங்கள் கொண்ட தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங் கிய லோபஸ் ஆப்ரதோர் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலை யில், அதே போல தேர்தல் முடிவுகள் எதிரொலித்தன.

53 சதவிகித வாக்குகள் பெற்று அவர் முதலிடம் பிடித்துள்ளார். மெக்சிகோவை கடந்த ஒரு நூற்றாண்டாக ஆண்டுள்ள இரு கட்சிகளை தோற்கடித்தவர் என்ற வர லாற்று சாதனையை லோபஸ் ஆப்ரதோர் படைத்துள்ளார். மற்றொரு முக்கிய கட்சியான தேசிய ஆக்சன் கட்சியின் சார் பில் போட்டியிட்ட ரிகார்டோ அனாயா 23 சதவிகித வாக்குக ளுடன் இரண்டாமிடம் பிடித்து உள்ளார். ஊழல், வறுமை, போதை, மாபியா ஆகியவற்றை ஒழிப்பதே தனது முதல் இலக்கு என லோபஸ் ஆப்ரதோர் தனது தேர்தல் வாக்குறுதியில் அளித் திருந்தார். அமெரிக்காவின் குடி யேற்ற கொள்கையை கடுமை யாக ஆப்ரதோர் விமர்சித்து வந்தாலும், இவரது வெற்றிக்கு டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner