எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வெள்ளை மாளிகை அறிக்கைவாசிங்டன், ஜூலை 3- கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், அதன் உற்பத்தியை அதிகரிக்க சவூதி அரேபிய மன்னர் சல்மான் சம்மதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது: சவூதி மன்னர் சல்மானுடன் தொலை பேசியில் உரையாடினேன்.

அப்போது, எண்ணெய் உற் பத்தி நாடுகளான வெனிசுலா மற்றும் ஈரான் நாடுகளில் ஏற் பட்டுள்ள அரசியல் குழப்பங் களாலும், செயலற்ற தன்மையா லும் கச்சா எண்ணெய்க்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அவரிடம் எடுத்துரைத்தேன்.

இந்தப் பற்றாக்குறையை சரிசெய்யவும், விலையேற்றத் தைக் கட்டுப்படுத்தவும் 20 லட்சம் பேரல் வரை கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிக ரிக்குமாறு சவூதி மன்னரிடம் வலியுறுத்தினேன். அதனை மன்னரும் ஏற்றுக் கொண்டார் என்று தனது சுட்டுரைப் பதி வில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:

அதிபர் டிரம்ப்பும், சவூதி மன்னரும் தொலைபேசியில் உரையாடினார்கள். அப்போது, அனைத்து நாடுகளும் பலன டையும் வகையில் எரிபொருள் சந்தையை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க வேண் டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும், வாங்கக் கூடிய விலையில் எரிபொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கச்சா எண்ணெய் சந்தையில் சமநிலையை ஏற் படுத்த இருவரும் ஒப்புக் கொண்டனர். தற்போதுள்ள எரிபொருள் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக, டிரம்ப் அறிவுறுத்தலின்படி 20 லட்சம் பேரல்கள் வரை கச்சா எண்ணெ யைக் கூடுதலாக உற்பத்தி செய்ய சவூதி அரேபியா தயாராக இருக் கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner