எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஜூலை 3- இந்திய உணவக ஊழியருக்கு எதிராக நிறவெறிக் கருத்துகளைக் கூறிய பிரிட்டன் பெண் காவலர் பதவி நீக்கம் செய் யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பிரிட்டனின் நியூ கேஸ்டில் நகரில் அமைந்துள்ள “ஸ்பைஸ் ஆஃப் பஞ்சாப்’ உணவ கம், இந்திய உணவு வகைகளை வழங்கி வருகிறது. அந்த உணவ கத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி வந்த கேட்டி பாரட் (22) என்ற காவல்துறை பெண் அதிகாரி, உணவகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரைப் பற்றி தனது நண்பரிடம் நிறவெறிக் கருத்து களைக் கூறியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மதுபோதையில் அவர் கூறிய கருத்துகள் குறித்து உயரதி காரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இது குறித்து துறை ரீதியிலான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், கேட்டி பாரட் இந்திய உணவகத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக முடிவு செய்த ஒழுங்காற்று ஆணையம், அவரை பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது.

4 நாள் அரசுமுறைப் பயணமாக

இந்தியா வருகிறார் தென்கொரிய அதிபர்

சியோல், ஜூலை 3- தென்கொரிய அதிபர் மூன் ஜே ஜூலை 8-ஆம் தேதி முதல் 11ஆ-ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின்போது அவர் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இதுதொடர்பாக தென்கொரிய அதிபர் மாளிகை வெளியிட் டுள்ள அறிக்கையில், இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அதிபர் மூன் ஜே இந்தியா வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு முதல்முறையாக வருகைதரும் மூன் ஜே, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இருநாட்டு பொருளாதார உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைத் தொடர்ந்து மூன் ஜே சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner