எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மணிலா, ஜூலை 5- பிலிப்பைன்சு நாட்டில் போதைப்பொருள் கடத்தல் பேர்வழிகள் மீது அந் நாட்டு அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது.

போதைப்பொருள் கடத்தல் காரர்களை கண்டவுடன் சுடு வதற்கும், தேடிக் கண்டுபிடித்து சுட்டுக் கொல்லவும் அந்நாட் டின் அதிபரான ரோட்ரிகோ டுட்டட்ரே காவல்துறையினர் மற்றும் ராணுவத்துக்கு முழு அதிகாரம் அளித்து உத்தரவிட்டு உள்ளார்.

இதையடுத்து, சுமார் ஏழரை லட்சம் பேர் சரண் அடைந்துள்ளனர். 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். அந்நாட்டின் பிரபல அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் காவல்துறையினரின் தேடுதல் பட்டியலில் இணைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், மின்டானாவோ மாகாணத்தில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டி ருந்த டட்டு சவுதி அம்பட்டு வான் நகர மேயர் சம்சுதீன் டிமாவ்கோம் மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட சுமார் 4,200 பேர் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இதற்கு அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பட்டாங்காஸ் மாகாணத் தின் டனுவான் நகர மேயர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியின்போது அந்நகரின் மேயர் அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தேசிய கீதம் இசைக்கப் பட்டபோது தூரத்தில் இருந்து பாய்ந்துவந்த ஒரு தோட்டா, மேயரின் மார்பை துளைத்து சென்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னதாக, காவல் துறையினரால் கைது செய்யப் பட்ட போதைப்பொருள் கடத் தல்காரர்களை தெரு வழியாக ஊர்வலமாக அழைத்து சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யவர், அன்ட்டோனியோ கான்டோ ஹலிலி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அன்ட்டோ னியோ கான்டோ ஹலிலி கொல்லப்பட்ட அதிர்ச்சி அந் நாட்டு மக்களிடம் இருந்து இன்னும் விலகாத நிலையில் நுயேவா எகிஜா மாகாண தலை நகரில் நேற்று காரில் சென்ற நகர மேயர் பெர்டினாண்ட் போட்டே(57) என்பவரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நேற்று சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் 18 தோட்டாக்கள் சிதறிகிடந்ததாக தெரிவித்த காவல்துறையினர், இதில் தொடர்புடைய குற்றவாளி களை தேடி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner