எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜூலை 5- அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அந் தோணி கென்னடி. 81 வயதான இவர் வரும் 31ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இது குறித்து அதிபர் டிரம்பை கடந்த வாரம் வாசிங்டன் வெள்ளை மாளி கையில் சந்தித்த பின்னர், அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

இதையடுத்து காலியாகிற ஒரு நீதிபதி பதவிக்காக 25 பேரது பெயர்களை அதிபர் டிரம்ப் பரிசீலனை செய்து வருகிறார் என தகவல்கள் கசிந்தன. அந்த 25 பேரில் ஒருவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபர் (49) ஆவார்.

இந்த நிலையில், அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் அதிபர் டிரம்ப் நேற்று முன் தினம் நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார்.

மற்றவர்கள் பிரெட் கவனாக், எமி கோனி பேரட், ரேமண்ட் கேத்லெட்ஜ் ஆவர்.

அமுல் தாபருக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை யின் குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கன்னல் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இந்த நேர்முக தேர்வு குறித்து அதிபர் டிரம்ப் கூறும்போது, இன்னும் 2 அல்லது 3 பேரிடம் நேர்முகத் தேர்வு நடத்துவேன். அதன்பிறகு உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு உரியவர் தேர்வு செய்யப்படுவார். இது குறித்த அறிவிப்பு 9-ஆம் தேதி வெளியிடப்படும். தேர்ந்தெடுக் கப்படுகிற நபர், மிகச் சிறந்த நபராக இருப்பார் என்று குறிப் பிட்டார்.

கடந்த ஆண்டு அமுல் தாபரை 6-ஆவது மேல்முறையீடு நீதிமன்ற நீதிபதியாக டிரம்ப் நியமனம் செய்தது நினைவு கூரத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner