எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கொழும்பு, ஜூலை 5- இலங்கை வடக்கு மாகாண அரசில் அமைச் சராக இருப்பவர் விஜேய கலா மகேஷ்வரன்.

ஆளும் அய்க்கிய தேதிய கட்சி உறுப்பினரான இவர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசுகையில், 2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் நாம் எப்படி இருந்தோம். நாம் தலைநிமிர்ந்து வாழ, தெருவில் சுதந்திரமாக நடமாட, நமது குழந்தைகள் பத்திரமாக பள்ளி சென்று வர தற்போது உள்ள சூழலில் விடுதலை புலிகள் மீண்டும் வந்தால் மட்டுமே சாத்தியம் என கூறினார்.

சமீபத்தில் யாழ்ப்பாணத் தில் 6 வயது சிறுமி பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதனை மேற்கோள்காட்டி பேசிய விஜயகலா, இதற்கா கவா மைத்திரிபால சிறிசேனா வுக்கு நாங்கள் வாக்களித்தோம் என்றார். வடக்கு மாகாண பகு தியில் எந்த வளர்ச்சித் திட்ட மும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட் டினார்.

விஜேயகலாவின் இந்த பேச்சு அந்நாட்டு நாடாளு மன்றத்தில் நேற்று அமளியை ஏற்படுத்தியது. இது தொடர் பாக ஆளும் கட்சி விளக்க மளிக்க வேண்டும் என எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில ளித்து பேசிய கல்வி அமைச்சர் அகில விராஜ் கரியவாசம், விஜே யகலாவின் பேச்சு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner