எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இஸ்லாமாபாத், ஜூலை 5- பாகிஸ்தானில் வருகிற 25-ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதில் பயங்கரவாதி ஹபீத் சயீத்தின் மில்லி முசுலிம் லீக் (எம்.எம்.எல்.) கட்சியும் போட்டியிடுகிறது.

இக்கட்சிக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. எனவே அல்லா-ஓ- அக்பர் தெக்ரிக் கட்சியின் சார்பில் இவர்கள் களம் இறங்கியுள்ளனர்.

இக்கட்சியின் சார்பில் மொத்தம் 260 பேர் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 79 பேர் நாடாளுமன்றத்துக்கும், 181 பேர் சட்டசபை தேர்தலிலும் களமிறங்கியுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடுபவர்களில் 13 பேர் பெண்கள், அவர்களில் 10 பேர் பொதுப்பிரிவிலும், 3 பேர் ஒதுக்கீட்டுப்பிரிவிலும் போட்டியிடுகின்றனர். இத்தகவலை எம்.எம்.எல். கட்சியின் செய்தி தொடர்பாளர் நதீம் அவான் தெரிவித்து உள்ளார்.

அரசியல் பின்னணி மற்றும் போராடும் திறன் படைத்தவர் களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்தோனேசியாவில் மேலும் ஒரு படகு விபத்து - 12 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா, ஜூலை 5- இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவு அருகே உள்ள தோபா ஏரியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.

இந்த விபத்தில் படகிலிருந்த 163 பேரில், சிலரின் சடலங் கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் பலி யாகியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், சுலாவேஸி தீவு பகுதியில் நேற்று காலை ஒரு படகு  விபத்துக்குள்ளானது. 139 பேர் படகில் இருந்ததாகவும் இதுவரை 12 பேர் இறந்து போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக் குள்ளான படகில் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட பயணிகளை ஏற்றுவதே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner