எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நோவ்காகிராட், ஜூலை 5- உலககோப்பை கால்பந்து திருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இதில் 32 நாடு கள் பங்கேற்றன. அவை 8 பிரி வாக பிரிக்கப்பட்டது. ஒவ் வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றன.

கடந்த 28-ஆம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் போட்டியை நடத்தும் ரஷியா, உருகுவே, ஸ்பெயின், போர்ச்சுக்கல், பிரான்ஸ், டென்மார்க், குரோ ஷியா, அர்ஜென்டினா, பிரே சில், சுவிட்சர்லாந்து, சுவீ டன், மெக்சிகோ, பெல்ஜியம், இங்கிலாந்து, கொலம்பியா, ஜப்பான் ஆகிய 16 நாடுகள் 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியன் ஜெர் மனி, எகிப்து, சவுதி அரே பியா, ஈரான், மொராக்கோ, பெரு, ஆஸ்திரேலியா, நைஜீ ரியா, ஐஸ்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா, தென்கொரியா, துனிசியா, பனாமா, செனகல், போலந்து ஆகிய 16 அணிகள் தொடக்க சுற்றிலேயே வெளி யேறின.

2ஆ-வது சுற்று ஆட்டங்கள் நேற்று முடிவடைந்தன. இதன் முடிவில் பிரான்ஸ், உரு குவே, ரஷியா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம், சுவீ டன், இங்கிலாந்து ஆகிய 8 நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

முன்னாள் வாகையர்களான அர்ஜென்டினா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல், டென் மார்க், மெக்சிகோ, ஜப்பான், சுவிட்சர்லாந்து, கொலம்பியா ஆகிய அணிகள் 2-ஆவது சுற்றில் வெளியேற்றப்பட்டன.

இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். கால்இறுதி ஆட்டங்கள் 6ஆம் தேதி தொடங் குகிறது. அன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் பிரான்ஸ்- உருகுவே, பிரேசில்- பெல்ஜியம் அணிகள் மோது கின்றன.

7-ஆம் தேதி நடைபெறும் கால்இறுதிகளில் இங்கிலாந்து-சுவீடன், ரஷியா, குரோஷியா அணிகள் மோதுகின்றன.

அரையிறுதி ஆட்டங்கள் 10 மற்றும் 11ஆம்தேதியும், இறுதிப் போட்டி 15ஆம் தேதியும் நடக்கிறது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner