எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெர்லின், ஜூலை 6- அய்ரோப்பிய யூனிய னில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டுவது வர்த்தகப் போர் பிரச் சினையை மேலும் அதிகரிக்குமே தவிர குறைக்காது என்று அமெரிக்காவுக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க வர்த்தக நலன்களை பாது காப்பதாகக் கூறி, பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான வரியை அதிபர் டிரம்ப் உயர்த்தி வரு கிறார். முக்கியமாக, இந்த விவகாரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவும் இடையே நேரடியான வர்த்தகப் போர் ஏற்பட்டது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அதன் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளான அய்ரோப்பிய யூனியன், தென் கொரி யாவுக்கும் தலைவலியை ஏற்படுத்தி யுள்ளது. இதனால் சர்வதேச அளவில் பெரும் பொருளாதாரப் பதற்றம் ஏற் பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வர்த்தக நலன்களுக்கு சீனா எந்த அளவுக்கு பாதகமாக இருந்ததோ, அதே அளவுக்கு அய்ரோப்பிய யூனியன் நாடுகளும் பாத கமாக உள்ளன; எனவே, அய்ரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு கூடுதல் வரி விதிப்பது குறித்து தீவிர மாக பரிசீலித்து வருவதாக தெரிவித் தார். அய்ரோப்பிய யூனியன் நாடுகளில் ஜெர்மனியில் இருந்துதான் அமெரிக்கா வுக்கு அதிக அளவிலான கார்கள் ஏற்று மதி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், அமெரிக்காவுக்கு பொருள் கள் இறக்குமதி செய்து அதிக நிதி திரட் டும் நாடுகளிலும் ஜெர்மனி முன்னிலை யில் உள்ளது. எனவே, டிரம்ப்பின் இந்த அறிவிப்பு ஜெர்மனியின் வர்த்தக நலன்களை வெகுவாக பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஜெர்மனி பிர தமர் ஏஞ்சலா மெர்கல் அந்நாட்டு நாடா ளுமன்றத்தில் பேசியதாவது:

ஏற்கெனவே, அய்ரோப்பிய யூனிய னில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு, அலுமினியப் பொருள்களுக் கான வரியை அமெரிக்கா அதிகரித்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலி ருந்து இறக்குமதி செய்யப்படும் ஜீன்ஸ், ஹார்லி - டேவிட்சன் மோட்டார் சைக் கிள்களுக்கான வரியை அய்ரோப்பிய யூனியன் அதிகரித்துள்ளது. இதனால், இருதரப்பின் வர்த்தக நலன்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கார்களுக்கு வரியை அதிகரிப்பதாகக் கூறுவது, வர்த்தகப் போரை மேலும் அதிகரிக்குமே தவிர குறைக்காது. மேலும், அமெரிக்கா பொருள் கள் அடிப்படையிலான வர்த்தகத்தை மட்டுமே கணக்கில் கொள்கிறது. அமெ ரிக்காவிடம் இருந்து அய்ரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு சேவை களைப் பெற்று வருகின்றன. அவற்றை யும் சேர்த்து கணக்கிட்டுப் பார்த்தால் அமெரிக்காதான் அய்ரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து அதிக அளவில் பணப் பயன்களைப் பெற்று வருகிறது என்பது தெரியவரும்.

அமெரிக்க அதிபர் மிகவும் பழை மையான முறையில் வர்த்தக விஷ யத்தை அணுகுகிறார் என்று மெர்கல் தெரிவித்தார். முன்னதாக, அமெரிக்கா வைச் சேர்ந்த அமேசான், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள், அய் ரோப்பிய யூனியன் நாடுகளில் மிகக் குறைந்த வரி செலுத்தி மிகுந்த வருவாய் ஈட்டி வருகின்றன; அவற்றுக்கு டிஜிட் டல் வரி விதிக்க பரிசீலிக்கலாம் என்று மெர்கல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner