எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜூலை 6- வாஷிங் டன் வெள்ளை மாளிகையில் துணை வழக்குரைஞராகவும், அமெரிக்க அதிபர் டிரம்பின் துணை உதவியாளராகவும் இருந்து வந்தவர் உத்தம் தில்லான். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

இவர், போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் பொறுப்பு நிர்வாகியாக நிய மிக்கப்பட்டு உள்ளார்.

இந்தப் பதவியில் இருந்து வந்த ராபர்ட் பேட்டர்சன் என்பவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, உத்தம் தில்லான் அந்தப் பதவிக்கு நியமிக்கப் பட்டு, பொறுப்பேற்றுள்ளார்.

இந்தப் பதவி, அமெரிக்கா வில் டிரம்ப் நிர்வாகத்தில் முக் கிய பதவி ஆகும். உத்தம் தில் லான் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ், இது பற்றி கூறுகையில், அமெரிக்கா வில் போதைப்பொருளை அள வுக்கு அதிகமாக எடுத்துக்கொள் வதால் ஒவ்வொரு 9 நிமிடத்தி லும் ஒருவர் உயிரிழக்கிறார். எனவே நமது வரலாற்றில் போதைப் பொருள் உபயோகத் தால் அதிகபட்ச உயிரிழப்பு களை சந்தித்து வருகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை என குறிப்பிட்டார்.

உத்தம் தில்லான், வெள்ளை மாளிகையில் மட்டுமல்லாது, நீதித்துறை, உள்நாட்டு பாது காப்புத்துறை, நாடாளுமன்றம் உள்ளிட்டவற்றிலும் பணியாற் றிய நீண்ட அனுபவம் மிக்கவர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner