எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

துபாய், ஜூலை 6- துபாய் நகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர் பான விழிப்புணர்வை ஏற்ப டுத்திய இந்தியச் சிறுவன் ஃபயஸ் முகமதுக்கு (10) “நகரின் சுற் றுச் சூழல் பாதுகாப்புத் தூதர்’ என்ற சிறப்பு கவுரவம் அளிக் கப்பட்டுள்ளது.

துபாய் நகரில் தனது வீட் டுக்கு அருகில் உள்ள மளிகைக் கடைகளுக்கு வரும் பொது மக்கள், பாலித்தீன் பைகளைப் பயன்படுத்துவதற்கு மாற்றாக துணிப் பைகளை தனது சேமிப் புப் பணத்தில் இருந்து வாங்கி கொடுத்ததுடன், தொடர்ந்து அந்தப் பைகளை மட்டுமே மளிகைப் பொருள்களை வாங்க பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். சிறுவனின் இந்த செயல், அப்பகுதி மக்கள் மத் தியில் வரவேற்பைப் பெற்றது டன், ஊடகங்கள் வழியாக துபாய் மாநகராட்சி நிர்வாகத் தின் கவனத்துக்கும் சென்றது.

இதையடுத்து, அவருக்கு நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப் புத் தூதர் என்ற கவுரவத்தை மாநகராட்சி நிர்வாகம் அளித் தது. இது தொடர்பாக சிறுவன் ஃபயஸ் கூறுகையில், “எனது வீட்டுக்கு அருகில் உள்ள மளி கைக் கடைகளில் அதிக அள வில் பாலித்தீன் பைகள் பயன் படுத்துவதைப் பார்த்தேன். பாலித்தீன் பைகள் சுற்றுச்சூழ லுக்கு எந்த அளவுக்கு கேடு விளைவிக்கும் என்பதை பள் ளிப் பாடத்தில் மட்டுமல்லாது, தொலைக்காட்சி, செய்தித்தாள் களில் வரும் விழிப்புணர்வு விளம்பரம் மூலம் தெரிந்து கொண்டேன்.

எனவே, இது தொடர்பாக என்னால் முடிந்த அளவுக்கு ஏதாவது செய்ய நினைத்தேன். இதற்காக, துணிகளால் ஆன பைகளை வாங்கி மளிகை கடைக்கு வரும் மக்களுக்கு கொடுக்க முடிவு செய்தேன். எனது தந்தை எனது செலவுக் காக தந்த பணத்தை சேமித்து முதல்கட்டமாக 130 துணிப் பைகளை வாங்கினேன். இப் போது, உலகக் கோப்பை கால் பந்து போட்டி நடைபெற்று வருகிறது. எனவே, மக்களைக் கவரும் வகையில் கால்பந்து அணிகளின் பெயர்களை அந் தப் பைகளில் வண்ணமயமாக எழுதி கடைகளுக்கு எடுத்துச் சென்றேன். அங்கு பொருள் களை வாங்க வந்தவர்களுக்கு துணிப் பைகளை இலவசமா கவே அளித்தேன். அவர்கள் என்னைப் பாராட்டியதுடன், அந்தப் பைகளையே தொடர்ந்து தாங்கள் பயன்படுத்துவதாகவும் உறுதியளித்தனர்’ என்று தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner