எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பாலன்பூர், ஜூலை 6- ஜிஎஸ்டி அமலாக்கமும், வேலையில்லாத் திண்டாட்டமும்தான் பிரதமர் மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று ஜிக்னேஷ் மேவானி சாடியுள்ளார்.தலித் தலைவரும், குஜராத் மாநிலம் வடகாம் தொகுதிசட்டப் பேரவை தொகுதி உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானி, அம் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்திலுள்ள பாலன் பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றார். ஆனால், ஒருவருக்குக் கூட வேலை வழங்கவில்லை.

இது நாட்டிலுள்ள 125 கோடி மக்களின் மீது மோடி நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் போன்ற வேறு சில சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளையும் மோடி நடத்தியுள்ளார். பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் விவசாயிகளின் வருமானம் உயரும்; விலைவாசி குறையும், கறுப்புப் பணம் ஒழியும் என்றுகூறினார். அவையும் ஒன்றுமே நடக்க வில்லை. நமது ராணுவத்தினர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தியதை விட, மிகப்பெரிய சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்றால் அதுபிரதமர் மோடி நாட்டு மக்கள்மீது நடத்திய தாக்குதல் களையே சொல்ல முடியும்.இவ்வாறு ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner