எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெய்ஜிங், ஜுலை 7- சீனாவில் உள்ள பன்னாட்டு வர்த்தகப் பள்ளியின் தலை வராக தீபக் ஜெயின் என்ற இந்திய பேராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அமெரிக்காவில் முன்னணி பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஆவார். தீபக் ஜெயினுக்கு வயது 61.

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள யூரோப் பன்னாட்டு வர்த்தக பள்ளி யின் தலைவராக 28 ஆண்டுகள் பதவி வகித்த பெட்ரோ நியூனோவுக்கு அடுத்த படியாக, தீபக் ஜெயின் அந்தப் பத விக்கு வருகிறார். இந்தப் பள்ளியின் சீன பிரிவு தலைவர் லீ மின்குன்-னு டன் இணைந்து தீபக் ஜெயின் பணி யாற்றுவார். தீபக் ஜெயின், அசாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர்.

தற்போது அமெரிக்காவின் சிகா கோ நகரில் வசித்து வருகிறார். ஒவ் வொரு மாதமும் 10 முதல் 15 நாட்கள் வரையில், இவர் ஷாங்காய் சென்று அந்த வர்த்தகப் பள்ளியில் பணியாற்றி வந்தார். தற்போது தலைமைப் பத விக்கு உயர்ந்துள்ளார். இதுதொடர் பாக, தீபக் ஜெயின் கூறியதாக சீன நாளிதழ்கள் வெளியிட்டுள்ள செய்தி யில் கூறப்பட்டிருப்பதாவது:

சீனாவில் பணிபுரிய விரும்பும் எந்தவொரு தனிநபரையும் நாங்கள் வரவேற்கிறோம். இங்கு ஏதேனும் செய்து சாதிக்க விரும்புவர்களாக நீங் கள் இருக்கலாம். உலகின் இப்பகுதி யினுடன், வேறு எந்தவொரு பகுதிக் கும் இணைப்பை ஏற்படுத்த முயற் சிப்பவர்கள் வரவேற்கப்படுவார்கள். சீனாவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள இந்த புதிய வாய்ப்பு உதவி யாக இருக்கும் என்று நம்புகிறேன். உருவகம் இல்லாத பிரச்சினைகளுக்கு உருவகம் அளிக்க வர்த்தக கல்வி முக் கியமானது என்று ஜெயின் கூறியதாக அந்தச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner