எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிறீலங்கா, ஜூலை 8 இலங் கையில் தமிழர்கள் பெரும்பான் மையாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்த சிறார் விவகாரங்கள் துறை அமைச்சர் விஜயகலா மகேஸ் வரன் பதவி விலகினார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பங்கேற்று அவர் பேசியபோது, வடக்கு மாகாணத்தில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. இந்தச் சூழலில் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு எழுச்சி பெற வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். போர் நடைபெற்ற கடந்த 2009-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதிக்கு முன்பு நாம் எப்படி சுதந்திரமாக வாழ்ந்தோம். குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிகளுக்குச் சென்று எப்படி வீடு திரும்பினர் என்பதை நாம் தற்போது நினைவு கூர்கிறோம்' என்று கூறியிருந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அய்க்கிய தேசிய கட்சியின் அமைச்சரான விஜயக லாவின் கருத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத் தினர்.

அரசமைப்புச் சட்டத்தை மீறிவிட்டதாகவும், அவருக்கு எதி ராக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் எதிர்க் கட்சிகள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, அவர் அரச மைப்புச் சட்டத்தை மீறியிருந்தால் சட்ட ரீதியான நட வடிக்கை எடுக்குமாறு அட் டார்னி ஜெனரலுக்கு அவைத் தலைவர் பரிந்துரைத்தார்.

பிரதமர் ரணில் விக்ரம சிங்கவும் விஜயகலாவை நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். அவர் கூறுகை யில், வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் எனது பதவி விலகல் கடிதத்தை அளித்து விட்டேன். அட்டார்னி ஜெனரல் விசாரணைக்காகவே நான் பதவி விலகினேன். யாரும் என்னை நீக்கவில்லை' என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner