எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜூலை 8 வரலாற்றின் மிகப் பெரிய பொருளாதாரப் போரை ஏற் படுத்தக் கூடியதாகக் கருதப்படும் சீன பொருள்கள் மீதான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரிகள், வெள்ளிக்கிழமை முதல் அம லுக்கு வந்தன.

சீனாவும், அந்தக் கூடுதல் வரிகளுக்கு பதிலடியான தங் களது நடவடிக்கைகளும் உடனடி யாக செயல்பாட்டுக்கு வருவதாக அறிவித்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட 3,400 கோடி டாலர் (சுமார் ரூ.2.3 லட்சம் கோடி) இயந்திரப் பொருள்கள், மின்சாதனங்கள், வாகனங்கள், கணினி உதிரி பாகங்கள் உள்ளிட்ட உயர் தொழில்நுட்பப் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தி ருந்தார்.

அந்த வரிவிதிப்புகள் வெள் ளிக்கிழமை (அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு) முதல் அமலுக்கு வந்தன.

இந்தச் சூழலில், தங்களது பொருள்கள் மீதான கூடுதல் வரிவிதிப்புக்கு பதிலடியாக தாங்கள் எடுக்கும் நடவடிக்கை களும் உடனடியாக அமலுக்கு வருவதாக சீனா அறிவித்துள்ளது.

அத்தகைய பதில் நடவடிக் கைகள் குறித்த விவரங்களை சீனா வெளியிடாவிட்டாலும், அமெரிக்காவின் ஒவ்வொரு டாலர் வரிவிதிப்புக்கும் நிகராக, அந்த நாட்டு இறக்குமதிப் பொருள்கள் மீது தாங்களும் கூடுதல் வரி விதிப்போம் என்று சீனா ஏற்கெனவே அறிவித்தி ருந்தது நினைவுகூரத்தக்கது.

வெள்ளிக்கிழமையிலிருந்து அமலாகியுள்ள அமெரிக்க கூடுதல் வரி விதிப்பு, மிகப் பெரிய பொருளாதாரப் போருக் குக் காரணமாக அமையக்கூடிய ஆரம்பக் கட்ட சிறு மோதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஏற்கெனவே, சீனாவிலிருந்து இறக்குமதியாகும் 45,000 கோடி டாலர் (சுமார் ரூ.31 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப் படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner