எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நியூயார்க், ஜூலை 9- கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங் களில் கடந்த மே மாதம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதனால் சுமார் 18 பேர் மரண மடைந்தனர்.

பின்னர், கேரள மாநில அரசு மேற்கொண்ட நடவடிக் கையால் நிபா வைரஸ் முற்றி லும் ஒழிக்கப்பட்டது. இந்நிலை யில், சிறப்பாக நடவடிக்கை எடுத்து நிபா வைரஸை கட்டுப் படுத்திய முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா டீச்சர் ஆகியோருக்கு அமெரிக்காவின் பால்டிமோர் வைராலஜி இன்ஸ்டிடியூட் பாராட்டுவிழா நடத்தியது. இதில், பினராயி விஜயன் மற்றும் சைலஜா டீச் சர் கலந்து கொண்டனர்.

அப்போது, கேரளாவில் நவீன வைராலஜி இன்ஸ்டிடி யூட் அமைப்பது தொடர்பாக பினராயி விஜயன் மற்றும் பால் டிமர் இன்ஸ்டிடியூட் தலைமை விஞ்ஞானிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அமெ ரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்க உள்ள விஜ யன் 18-ஆம் தேதி நாடு திரும்பு கிறார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner