எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சியாங் ராய், ஜூலை 12- தாய்லாந் தில் வெள்ள நீர் புகுந்த குகைக் குள் கடைசியாக சிக்கியிருந்த 4 சிறுவர்கள் மற்றும் அவர் களது கால்பந்து பயிற்சியாளரை மீட்புக் குழுவினர் செவ்வாய்க் கிழமை மீட்டனர்.

இதையடுத்து, குகைக்குள் சிக்கியவர்களைப் பற்றி கடந்த 17 நாள்களாக உலகம் முழுவ தும் நீடித்து வந்த பரிதவிப்பு முடிவுக்கு வந்தது.

குகைக்குள் சிக்கியவர்களை மிக மிக தீவிர முயற்சி எடுத்து, பொருட் செலவு, மனித உழைப்பு என எதையும் பொருட்படுத்தா மல், சிறுவர்களை மீட்க முழு முயற்சி மேற்கொண்ட தாய் லாந்து அரசுக்கும், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு சிக்கலான குகைப் பாதையை சிறுவர்கள் கடக்க உதவிய மீட்புக் குழுவினருக் கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த வெற்றியை தாய் லாந்து மக்கள் கொண்டாடி வருகிறார்கள். சமூக தளங்களில் இது தொடர்பான தகவல்களை யும், பாராட்டு மற்றும் கொண் டாட்ட செய்திகளையும் அவர் கள் பகிர்ந்து வருகிறார்கள்.

இதுகுறித்து முகநூல் வலை தளத்தில் தாய்லாந்து கடல் அதிரடிப்படை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:

குகைக்குள் சிக்கியிருந்த வைல்டு போர்ஸ்’ கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர் கள், அவர்களது பயிற்சியாளர் உட்பட 13 பேரும் மீட்கப்பட்டு விட்டனர்.

மீட்கப்பட்ட அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner