எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

 

பாங்காக், ஜூலை 13- தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் மியான்மா எல்லையில் மலை உச்சியில் 800 மீட்டர் ஆழத்தில் 10 கி.மீ. தூரம் உள்ள குகை உள்ளது. கடந்த மாதம் 23ஆம் தேதி காட்டுப் பன்றிகள் என்ற கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்களும், பயிற்சியா ளரும் சாகசப் பயணம் மேற் கொண்டனர். குகைக்குள் ஒரு கி.மீ. தூரம் சென்றபோது திடீர் என்று மழை பெய்து வெள்ளம் புகுந்தது. அவர்களால் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

குகைக்கு வெளியே அவர் கள் நிறுத்தி வைத்திருந்த சைக் கிள்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 9 நாட்க ளுக்கு பிறகுதான் அவர்கள் உயி ருடன் இருப்பது வெளியுலகத் துக்கு தெரிய வந்தது.

இதையடுத்து 13 பேரையும் மீட்கும் நடவடிக்கையில் தாய் லாந்து அரசு ஈடுபட்டது. இங் கிலாந்து, இந்தியா உள்பட பல்வேறு நாட்டு குகை மீட்பு நிபுணர்கள் முத்துக்குளிப்பு வீரர்கள் அங்கு குவிந்து மீட்பு பணியில் உதவினர்.

கடந்த 8-ஆம் தேதி 4 சிறு வர்களும், 9-ஆம் தேதி 4 சிறு வர்களும் மீட்கப்பட்டனர். கடைசியாக 10-ஆம் தேதி 4 சிறு வர்கள் மற்றும் பயிற்சியாளரை தாய்லாந்து நாட்டு கடற்படையினர் உயிருடன் மீட்டனர். இது மிகப்பெரிய சாதனையா கும்.

இதை தாய்லாந்து நாடே மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடி வருகிறது. அப் போது சிறுவர்களை மீட்டது பற்றிய சாகசங்களை அதில் ஈடுபட் டவர்கள் தெரிவித்தனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 2 முத்துக்குளிப்பு வீரர்கள்தான் முதலில் 12 சிறுவர்களையும் கண்டு பிடித்தனர். அவர்கள் வெளியே வந்துதான் சிறுவர் களைப் பற்றிய விவரங்களை தெரிவித்தனர். அவர்கள் வெளி யில் வந்து தகவல் சொன்ன 6 நாட்களுக்குப் பிறகுதான் முழு வீச்சில் மீட்பு பணியை தொடங்க முடிந்தது.

முதலில் அவர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கொண்டு செல்லப் பட்டது. குகைக்குள் தண்ணீர் நிரம்பி இருந்தது. சிறுவர்களுக்கு நீச்சல் தெரியாது என்பதால் மறுபுறம் ஓட்டை போட்டு மீட்கலாமா என முயற்சி நடந் தது. அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

அதன்பிறகு தண்ணீரை வெளியேற்றி மீட்கும் முயற்சி கைகொடுத்தது. இதற்கு இந்தி யாவின் புனேயைச் சேர்ந்த கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவ னம் உதவியது. இந்த நிறுவனத் தைச் சேர்ந்த நிபுணர்கள் அங்கு சென்று ஆய்வு செய்து, பம்பு களை பயன்படுத்தி குகைக்குள் உள்ள தண்ணீரை வெளியேற் றுவது தொடர்பான ஆலோச னைகளை வழங்கினர். அதன் படி,  குகைக்குள் நிரம்பியிருந்த தண்ணீர் ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.

அதன்பிறகு சிறுவர்களுக்கு முக கவசம் பொருத்தியும் கயிற்றை பிடிமானமாக வைத் தும் ஒவ்வொரு சிறுவனாக மீட்டனர்.

இதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்து  தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டான் பிரமுத்வினய் கடிதம் எழுதி யுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner