எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜூலை 13- டேவிட் ஹேலேகு அமெரிக்க வெளியுற வுத்துறையில் கீழ்நிலை செய லாளர் பதவியில் பொற்பேற்க உள்ளார். அமெரிக்காவில் வெளி யுறவுத்துறையில், துறைக்கான அமைச்சர், செயலாளர் பதவிக்கு அடுத்த மூன்றாவது உயர் பதவி இந்தப் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பதவியில் இருந்து வந்த தாமஸ் ஷானோன் கடந்த மாதம் 4-ஆம் தேதி ஓய்வு பெற்று விட்டதை அடுத்து உருவாகி உள்ள காலி இடத்தை நிரப்புவதற்கு டேவிட் ஹேலே வருகிறார்.

டேவிட் ஹேலே, வெளியுற வுத்துறையில் கீழ்நிலை செய லாளர் பதவி ஏற்பதற்கு அமெ ரிக்க நாடாளுமன்றத்தின் மேல் சபையான செனட் சபை தனது ஒப்புதலை வழங்க வேண்டும்.

இவர் 2015ஆ-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் அமெரிக்க தூதர் பதவி வகித்து வருகிறார். இந் தியா, பாகிஸ்தான் இடையே யான உறவு, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதற்கு இவர் தனது ஆதரவை தெரிவித்து வந்தார். இவர் லெபனான் நாட்டிலும் அமெரிக்க தூதர் பதவி வகித்து இருக்கிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner