எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜூலை 14 அமெரிக்காவில் சுயதொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டிய சாதனைப் பெண்களின் பட்டி யலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் இடம்பெற் றுள்ளனர்.

இந்தப் பட்டியலை அமெ ரிக்காவின் பிரபலமான ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதில், அமெரிக்காவின் 60 சாதனைப் பெண்களின் பெயர் கள் இடம்பெற்றுள்ளன. அவர் களில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெயசிறீ உல்லல் 18-ஆவது இடத்தைப் பிடித்துள் ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.8,917 கோடியாகும்.

லண்டனில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்த ஜெயசிறீ உல்லல் (57), கடந்த 2008-ஆம் ஆண்டில் இருந்து அரிஸ்டா நெட்வொர்க்ஸ் என் னும் கணினி நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.

அந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானம் 160 கோடி டாலராகும் (இந்திய மதிப்பில் ரூ.10,975 கோடி. அந்த நிறுவ னத்தின் 5 சதவீத பங்குகளை ஜெயசிறீ உல்லல் வைத்துள் ளார்.

இதேபோல், மற்றொரு இந்தியப் பெண் நீரா சேத்தி 21-ஆவது இடத்தைப் பிடித்துள் ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.6,859 கோடியாகும்.

63 வயதான இவர், தனது கணவர் பாரத் தேசாயுடன் இணைந்து மிச்சிகன் நகரில் சிண்டெல் என்ற தகவல் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் அயல் பணி நிறுவனத்தை கடந்த 1980-ஆம் ஆண்டில் இருந்து நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானம் ரூ.6,338 கோடியாகும்.

சிண்டெல் நிறுவனத்தில் 23,000 பேர் பணியாற்றுகிறார் கள். அவர்களில் 80 சதவீதத் தினர் இந்தியாவைச் சேர்ந்த வர்கள் ஆவர்.
இதுகுறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ள தாவது:

அமெரிக்காவில் பெண் தொழில் முனைவோர் தங் களின் முயற்சியால் புதிய உச்சத்தை எட்டியுள்ளனர்.

மரபணு சோதனை முதல் விண்வெளி ஆய்வு வரை பல் வேறு தளங்களில் செயல்பட்டு, நாட்டின் எதிர்காலத்தை த் தீர்மானிக்கிறார்கள். இவர்கள் தங்களின் தொழில் வளர்ச்சியை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.

இதன் மூலம், முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு சிறந்த வெற்றியாளர்களாக உரு வாகியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner