எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமாபாத், ஜூலை 15 பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பேரணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 133 பேர் பலியாகினர். 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி முகமது அயூப் அச்சாக்ஸய் கூறியதாவது:

பாகிஸ்தானில் இருவேறு இடங்க ளில் நடைபெற்ற தேர்தல் பேரணிகளின் போது பயங்கரவாதிகள் இந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பை நடத்தியுள் ளனர்.

பலூசிஸ்தான் மாகாணம் மஸ்துங் பகுதியைச் சேர்ந்த பலூசிஸ்தான் அவாமி கட்சி தலைவர் சிராஜ் ரைசானியை முக்கியமாக குறிவைத்து பயங்கரவாதி கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிராஜ் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார்.

பலூசிஸ்தான் முன்னாள் முதல்வ ரான நவாப் அஸ்லாம் ரைசானியின் சகோதரர்தான் இந்த சிராஜ் ரைசானி.

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட கட்சி பேரணி என்பதால் பயங்கரவாதி கள் இந்த வெடிகுண்டு தாக்குதலை எவ்வாறு நடத்தினார்கள் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. எனினும், தற்கொலைத் தாக்குதல் மூலம் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப் பட்டதா என்பது குறித்து காவல்துறையினரும் புலானாய்வு அதிகாரிகளும் விசா ரணை நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.

இதனிடையே, இந்தத் தாக்குதலுக்கு அய்.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப் பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டு வெடிப்பையடுத்து, குவெட்டா பகுதியில் உள்ள மருத்துமனைகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு கூடுதல் மருத்துவ பணியாளர்கள் வரவ ழைக்கப்பட்டனர்.

பலுசிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட இந்த குண்டுவெடிப்புக்கு முன்னதாக, கைபர் பக்துன்கவா பகுதியில் நடை பெற்ற அக்ரம் கான் துரானியின் முத் தாகிடா மஜ்லிஸ் அமால் கட்சிப் பேர ணியில் பயங்கவாதிகள் குண்டு வெடிப்பை நடத்தினர். இதில் அய்ந்து பேர் உயிரிழந்தனர். மேலும், 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் 25-ஆம் தேதி பாகிஸ்தானில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பயங்கரவாதிகள் அரசியல் கட்சி தலைவர்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner