எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், ஜூலை 15- அய்ரோப் பிய யூனியனிலிருந்து பிரிட் டன் வெளியேறும் 'பிரெக்ஸிட்' நடவடிக்கைக்குப் பிறகு, பிரிட் டன் மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பிரிட் டனில் வெள்ளிக்கிழமை சந் தித்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை முதல் பிரிட்டனில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதிபராகப் பொறுப்பேற்ற தற்குப் பிறகு டிரம்ப் பிரிட்டன் வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அய்ரோப்பிய யூனியனிலி ருந்து பிரிட்டன் பிரிவதற்கான பிரெக்ஸிட் நடவடிக்கைகளில் பிரிட்டன் மும்முரமாக ஈடு பட்டு வரும் நிலையில், அமெ ரிக்க அதிபரின் வருகை முக்கி யத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.

இந்தச் சூழலில், பிரெக்ஸிட் டுக்குப் பிந்தைய வர்த்தக உற வுகள் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், பிரிட்டன் பிரதமர் தெரசா மே-யும், எல்லிஸ்பரோ கிராமத்திலுள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இரண்டாவது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத் தினர். பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அமெரிக்காவுக்கும், பிரிட் டனுக்கும் இடையிலான நல் லுறவு, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சிறப்பானதாக இருக்கிறது.

அய்ரோப்பிய யூனியனிலி ருந்து பிரிட்டன் பிரிவது, இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கு அபரிமித மான வாய்ப்புகளை அள்ளி வழங்கியுள்ளது.

பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் எவ்வாறு நடந்து கொண்டாலும், அதனை நான் ஆட்சேபிக்கமாட்டேன்.

பிரிட்டனுடன் மிகச் சிறந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற் கொள்ள ஆவலுடன் உள்ளோம். சுதந்திரம், நீதி, அமைதி ஆகிய பொதுக் கொள்கைகளை அடித் தளமாகக் கொண்ட அமெரிக்க - பிரிட்டன் உறவு அசைக்க முடியாத அளவுக்கு உறுதியா னது என்றார் அவர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் தெரசா மே கூறியதாவது:

இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான, இது வரை இல்லாத கனவுத் திட் டத்தை உருவாக்குவது குறித்து நானும், டிரம்ப்பும் ஆழ்ந்து விவாதித்தோம்.

அமெரிக்காவுடன் மட்டு மின்றி, உலகின் பிற நாடுகளுட னும் பிரெக்ஸிட்டுக்குப் பிந் தைய வர்த்தக நல்லுறவை ஏற் படுத்தும் ஒப்பந்தங்களை மேற் கொள்வோம்.

பிரெக்ஸிட் குறித்து பொது வாக்கெடுப்பில் மக்கள் என்ன தீர்ப்பு வழங்கினார்களோ, அதைத்தான் தற்போதைய எங் களது நடவடிக்கைகள் நிறை வேற்றி வருகின்றன என்றார் அவர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner