எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜூலை 16- கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், அப்போதைய குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தும் வகை யில் தலையீடு செய்ததாக 12 ரஷ்ய உள வுத் துறை அதிகாரிகள் மீது அமெரிக்க நீதித் துறை குற்றச்சாட்டு பதிவு செய்து உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட 29 பக்க குற்றப் பதிவு ஆவணத்தில் தெரி விக்கப்பட்டுள்ளதாவது: “ஜிஆர்யூ’ என் றழைக்கப்படும் ரஷ்ய உளவுப் பிரிவு, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வாக்களர்களின் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது.

இணையதளம் வழியாக ஊடுருவிய அந்த உளவுப் பிரிவினர், அப்போதைய அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்ட னின் பிரச்சார அலுவலகம் மற்றும் அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சியின் அலுவலக ஆவணங்களையும், மின் அஞ்சல்களையும் திருடினர்.

எனவே, இணையதளம் மூலம் ஊடு ருவி தேர்தலில் தலையீடு செய்ததாக ரஷ்ய உளவுப் பிரிவைச் சேர்ந்த 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படு கிறது.

எனினும், இந்தக் குற்றத்தில் அமெ ரிக்காவைச் சேர்ந்த யாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவரவில்லை.

எனவே, இதுதொடர்பாக எந்த அமெரிக்கர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை” என்று அந்த ஆவ ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாகவும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராகவும் மக்களின் கருத்தைத் திரட்டும் வகையிலான நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற் கொண்டு வந்த மத்திய அரசின் சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லரின் பரிந்துரையின் பேரில், அதிபர் தேர்த லின்போது சமூக வலைதளங்களின் மூலம் 'குறிப்பிட்ட' கட்சி வேட்பாளர் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களைப் பரப்பிய தாக 13 ரஷ்யர்கள் மீது கடந்த பிப்ரவரி மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டிருந்தது. முகநூல், இன்ஸ்டாகிராம், சுட்டுரை (டுவிட்டர்) ஆகிய சமூக வலைதளங்களில் அந்த 13 பேரும் நூற்றுக்கணக்கான போலி பெயர்களில் தங்களை இணைத்துக் கொண்டு, அமெ ரிக்கர்களைப் போன்ற தோற்றத்துடன் அந்த வலைதளங்களில் பதிவுகள் மேற் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந் தது.

இந்த நிலையில், தற்போது ரஷ்ய உளவுப் பிரிவு அதிகாரிகள் மீது குற்றச் சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner