எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், ஜூலை 16- மெக்சி கோவில் இருந்து அமெரிக்க எல்லைக்குள் உரிய ஆவணங் கள் இன்றி சட்டவிரோதமாக நுழைந்த அகதிகளையும், அவர்களது குழந்தைகளையும் பிரித்து காவலில் வைக்கும் கொள்கையை டிரம்ப் நிர்வாகம் அமல்படுத்தியது.

இதன்படி, அங்கு சுமார் 2 ஆயிரம் குழந்தைகள், பெற் றோர்களிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டனர். இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யது. டிரம்பின் அகதிகள் கொள் கைக்கு அவரது மனைவி மெல னியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரும்கூட எதிர்ப்பு தெரிவித்தனர். கடை சியில் டிரம்ப் பணிந்தார். அக திகளையும், அவர்களது குழந் தைகளையும் பிரிக்கும் கொள் கையை திரும்பப்பெற்றார்.

இந்த விவகாரம் தொடர் பாக அமெரிக்க மனித உரிமை கூட்டமைப்பு ஒரு வழக்கை கலிபோர்னியா மாகாணம், சாண்டீகோவில் உள்ள நீதிமன் றத்தில் தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டானா சாப்ரா,

"பிரித்து வைக்கப்பட்ட குழந் தைகளை மீண்டும் பெற்றோர்க ளுடன் கொண்டு வந்து சேர்ப் பதற்கு ஆகிற செலவை பெற் றோர்கள் தர வேண்டியது இல்லை. அமெரிக்க அரசுதான் இந்த செலவை ஏற்க வேண் டும்” என்று அதிரடியாக உத்தர விட்டார்.

முதலில் ஒரு குழந்தையை பெற்றோருடன் இணைப்ப தற்கு பெற்றோர் 1900 டாலர் (சுமார் ரூ. 1 லட்சத்து 29 ஆயி ரம்) தர வேண்டும் என்று அதி காரிகள் உத்தரவிட்டது குறிப் பிடத்தக்கது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner